SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018 கொண்டாப்பட்டது.

SRM அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்து மற்றும் கவின் கலைகள் மையம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கலையரங்கில் நவராத்திரி உற்சவம் -2018டை வெகு விமர்சையாக கொண்டாடியது.
அரங்கத்தில் கொலு பொம்மைகளுடன் ஜுகல்பந்தி நகழ்வில் பத்மபூசன் பண்டித் விஷ்வ மோகன் பகத் ,உலக புகழ் பெற்ற வயலின் வித்வான் அம்பி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை வழங்கினர்.அதை தொடர்ந்து திரிஷக்தி என்ற அம்பாளின் மூன்று அம்சமான தேவியர்களை போற்றும் ஒடிசி மற்றும் கதக் போன்ற நடன நிகழ்ச்சியை புகழ்பெற்ற பரத கலைஞர்களான பிரிய தர்ஷினி கோவிந் ,சுஜாத்தா மோஹபட்ரா மற்றும் விதா லால் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ,துனை வேந்தர் டாக்டர் சந்திப் சன்செட்டி , இணைத் துணை வேந்தர் ( வெளியுறவுத் துறை) முனைவர் இர.பாலசுப்பிரமணியன் ,பதிவாளர் நா.சேதுராமன் மற்றும் நிகழ்த்து மற்றும் கவின் கலைகள் துறைத் தலைவர் டாக்டர் சோபனா விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் டாக்டர் பாரிவேந்தர் பேசுகையில் இந்த பல்கலைக்கழகத்தில் இந்த துறையை தொடங்கியதே நடனம் மற்றும் கவின் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இதன் நோக்கம் ஆகும். கூடிய விரைவில் இந்த துறைக்கு என்று தனி கட்டிடம் கட்டித்தரப்படும் என்று கூறினார்.

ALSO READ:

SRMIST hosted Navratri Utsav 2018

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *