செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம்

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைக்காட்சி இந்தியாவில் முதல் முறையாக எல்.ஜி அறிமுகம்

இந்தியாவிலேயே தயாரிப்போம் தொடர் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுடன்
கூடிய புதிய 4கே ஜா° டிவி உள்பட 25 மாடல் டிவிக்கள் அறிமுகம்

சென்னை, அக்.11-

ஆர்டிபிஷியல் இன்டிலிஜென்° (ஏஐ) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுடன்
கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சியை எல்.ஜி. எலெக்ட்ரானிக்° இன்று
இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் புதியவடிவத்தில் மேலும் பலசிறப்பம்சங்களுடன் இந்த
தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை மேலும் தெளிவாகவும்
துல்லியமான ஒலியுடனும் ஓஎல்இடி,சூப்பர் யுஎச்டி, யுஎச்டி மற்றும் °மார்ட் டிவி என
பல்வேறு மாடல்களில் இந்த தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஐ
தொழில்நுட்பத்தில் எல்.ஜி. தொலைக்காட்சி செயல்படுவதால் வாடிக்கையாளர்கள்
நேரடியாக அதனுடன் பேசலாம். இதனால் நீங்கள் தொலைக்காட்சியின் செயல்பாடுகளை
கட்டுப்படுத்தமுடியும். விளையாட்டு தொடர்பான அம்சங்களும் இதில் உள்ளன. நீங்கள்
இடும் கட்டளையை நிறைவேற்றுவதோடு இது உங்களது கேள்வியின் உள் அர்த்தத்தையும்
புரிந்து கொண்டு திறமையாக செயல்படும் சாதனமாகும். நாம் கேட்கும்கேள்வியை
கேட்டுக்கொண்டு அதற்கு பதில் அளிப்பதோடு நிதானமாக கேள்விகளை
உள்வாங்கிக்கொண்டு சிந்தித்து பதில்அளிக்கும். இன்டர் நெட் இணைப்பு இல்லாமல்
800க்கும் மேற்பட்ட கட்டளைகளை ஏற்று செயல்படும் திறன் படைத்தது.

எல்.ஜி எலெக்டராணிக்° புத்தம் புதிதாக 4கே ஜா° தொலைக்காட்சியையும் இன்று
அறிமுகம் செய்தது. 35 வால்ட் வூபர் மற்றம் அல்ட்ரா பிரைட் ஐபிஎ° 4கே அனுபவம்
திங்க் கியூ வசதி உள்ளிட்டவை இதில் உண்டு.,முழமையாக பொழுதுபோக்கு அம்சங்களை
இந்த தொலைக்காட்சி உங்களுக்கு வழங்கும். சக்தி வாய்ந்த ஒலி மற்றும் எதனுடனும்
ஒப்பிடமுடியாத அளவுக்கு திரையில் தெளிவான காட்சிகள் ஆகியவற்றையும்
உள்ளடக்கியது இந்த தொலைக்காட்சியாகும்.

செயற்கையான நுண்ணறிவுடன் கூடிய 25 மாடல்களை கொண்ட இந்த தொலைக்காட்சி டிவி
வரலாற்றில் புதிய அனுவத்தை உங்களுக்கு வழங்கும். இந்த தொலைக்காட்சியில்
பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களும் பொருட்களும் இந்தியாவில்
தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு முழு நேர
பொழுதுபோக்கு சேவையை இந்த தொலைக்காட்சி அறிமுகம் மூலம் வழங்குவதாக எல்ஜிஎ
லெக்ட்ராணிக்° வீட்டு சேவை பொழுதுபோக்கு பிரிவின் இயக்குநர் திரு.யுன்சூல் பார்க்
கூறினார். எல்.ஜி டிவி வாடிக்கையாளர்கள் திரையில் குகூள் போட்டோ, டிரைவில் உள்ள
போட்டோ வீடியோக்களை பார்க்கமுடியும். இதன் ஓஎல்இடி தொலைக்காட்சியில் படத்தின்
தரம் சிறந்தாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:

LG unveils “India’s first TV with Artificial Intelligence”

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *