நோட்டா சினிமா விமர்சனம் (3/5)

நோட்டா சினிமா விமர்சனம் (3/5)

ரேட்டிங் 3/5

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் நோட்டா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர்.
இதில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் பிர்சாடா, சத்யராஜ்,நாசர்,சஞ்சனா நடராஜன்,மொட்டை ராஜேந்திரன்,யாஷிகா ஆனந்த்,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:-இசை சாம் ஊளுஇ ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், கதை-ஷான் கருப்புசாமி, திரைக்கதை – ஆனந்த் ஷங்கர், ஷான் கருப்புசாமி, படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் கிரிஸ்டா, கலை-மூர்த்தி, சண்டைபயிற்சி -அன்பரிவ், நடனம்-பிருந்தா, பாடல்கள் – கார்க்கி, மக்கள் தொடர்பு – டீ. யுவராஜ்.
முதலமைச்சராக இருக்கும் நாசர் தன் மேல் ஊழல் வழக்கு விசாரணை நடைபெறுவதால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல் மனைவியின் மகனான விஜய் தேவரகொண்டாவை முதலமைச்சராக்குகிறார். கேளிக்கை மன்னனான விஜய் தேவரகொண்டா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஒரு சில மாதங்களே என்ற நம்பிக்கையில் இதற்கு சம்மதிக்கிறார். இதனிடையே நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு நிரூபனமாக ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இதனால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்க சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொறுப்பு முதலமைச்சர் விஜய் தேவரகொண்டா மேற்கொள்ள நேரிடுகிறது. இதை அதிரடியாக சமாளிக்கும் முதலமைச்சருக்கு ரௌடி சிஎம் என்று அடைமொழி ஏற்படுகிறது. இவருக்கு பல வழிகளில் அறிவுரை வழங்கி உதவி செய்கிறார் சத்யராஜ்.அது முதல் தன் முதலமைச்சர் பொறுப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பல துரித நடவடிக்கைகள் எடுத்து விஜய் தேவரகொண்டா நல்ல பெயர் எடுக்கிறார். ஜெயிலிருக்கும் நாசர் பெயில் கிடைத்து வெளிவரும் போது குண்டு வெடித்து அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தன் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டது யார்? என்ன காரணம்? என்பதை நண்பனின் மூலம் அறிய முற்படுகிறார் விஜய் தேவரகொண்டா.அப்பொழுது திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது. இதுவே தந்தைக்கும், மகனுக்கும் பனிப்போர் மூள்கிறது. மகன் விஜய் தேவரகொண்டாவிடமிருந்து பதவியை பறிக்க தந்தை நாசர் முயல்கிறார். இதில் நாசர் பெற்றி பெற்றரா? விஜய் தேவரகொண்டா சதியை முறியடித்து வெற்றி பெற்றாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
தெலுங்கு வெற்றி பட நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவாக பூர்த்தி செய்திருக்கிறார்.நடனத்திலும், தமிழ் வசன உச்சரிப்பிலும் சரி, அதிரடி ஆக்ஷனிலும் சரி, நடை, உடை, பாவனையிலும் மனதை கொள்ளும் புதிய சாக்லெட் பாய் உருவாகியிருக்கிறார்.
மெஹ்ரின் பிர்சாடா தமிழில் எந்த படத்தில் வந்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டரில் வருவதில்லை என்பது ஒரு பெரிய குறை. சஞ்சனா நடராஜன் அந்த குறையை போக்கி எதிர்க்கட்சி பேச்சாளராக அசத்தியிருக்கிறார்.
நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் மின்னுகிறார்கள்.மொட்டை ராஜேந்திரன்,யாஷிகா ஆனந்த்,கருணாகரன் ஆகியோர் ஒரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.
சாம் ஊளு இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், கேட்கும்படியும் கொடுத்திருக்கிறார்.
சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு அரசியல்; சம்பந்தப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக காட்சிக் கோணங்களில் அசர வைக்கிறார்.
இயக்கம்-ஆனந்த் ஷங்கர். ஷான் கருப்பசாமியின் கதையை திரைக்கதையாக்கி அதில் நிஜமாக நடந்து முடிந்த அரசியல் அதிரடி சம்பவங்களை ஞாபகப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்து அதை சிக்கலான தருணத்தில் நல்ல முடிவை எடுத்து தவிர்த்திருக்கலாம் என்பதை காட்சியப்படுத்திய விதத்தில் கை தட்டல் பெறுகிறார் இயக்குனர்ஆனந்த் ஷங்கர்;. தர்மபுரி பஸ் எரிப்பு, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, கூவத்தூர் அமைச்சர்கள் கலாட்டா, முதலமைச்சரைப் பார்த்து குனிந்து வணங்கும் முறை, மருத்துவமனை அலப்பறை, எதிர்கட்சிகளின் சூழ்ச்சி, கார்ப்பரெட் சாமியாரின் பண ஆசை, சொகுசு வாழ்க்கை, தந்தை-மகன் அரசியல் சதுரங்க ஆட்டம் என்று அனைத்தையும் கொடுத்து சிறப்பாக இயக்கியுள்ளார் ஆனந்த் ஷங்கர்.

மொத்தத்தில் நோட்டா விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழில் சிவப்பு கம்பளம் விரித்து வெற்றி நடை போடும் விசிட்டிங் கார்ட்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *