SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் மாலை 5.30 மணியளவில் நவராத்தி உற்சவம் 2018ஐ டாக்டர் தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் வெகு விமரிசையாக நடத்த உள்ளது.
முதல்நாள் நிகழ்வான அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜூகல்பந்தியில் உலகப்புகழ்பெற்ற இரண்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பத்மபூஷன் மற்றும் கிராமி விருது பெற்ற பண்டிட் விஷ்வ மோகன் பட் அவர்களும் இளம் வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்பிரமணியம் அவர்களும் தம் இசைக்கச்சேரியை வழங்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேவியின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும் திரிசக்தி நடனநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பரதநாட்டியம், ஒடிசி மற்றும் கதக் ஆகிய மூன்று வகை நடனங்கள் இடம்பெறவுள்ளன. கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநரும் உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞருமான பிரியதர்ஷினி கோவிந்த் அவர்களின் பரதமும், ஒடிசி நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற சுஜாதா மோகப்பாத்ரா அவர்களின் ஒடிசி நடனமும், கதக் நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த விதா லால் அவர்களின் கதக் நடனமும் நடைபெறவுள்ளன.
இரண்டாவது நாளான அக்டோபர் 13 ஆம் தேதி கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் மகாநதி திரைப்படத்தின் வழி புகழ்பெற்றவருமான எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையத்தின் துறைத்தலைவருமான முனைவர் ஷோபனா விக்னேஷ் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து “கலர்ஸ் ஆப் இந்தியா” என்னும் தலைப்பில் பிரியா வெங்கடராமனின் பரதம், கலாமண்டலம் மனோஜ் அவர்களின் கதகளி, ஜெயபிரபா மேனன் அவர்களின் மோகினியாட்டம், பிரதீக்ஷா காஷி அவர்களின் குச்சிப்புடி, மேகரஞ்சனி மேதி அவர்களின் கதக், விரிந்தா சதா அவர்களின் ஒடிசி என அனைவரின் நடனங்கள் நடைபெறவுள்ளன.
இவர்கள் அனைவருமே உலகப்புகழ்பெற்ற தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற இசைக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட நவராத்திரி உற்சவ நிகழ்ச்சியில் இரண்டு நாட்களும் கலந்துகொள்ள அனுமதி இலவசம். அனைவரும் வருக. கலைகளை நுகர. மகிழ்வை அடைக.

ALSO READ:

NAVARATRI UTSAV 2018 AT SRMIST… A RARE TREAT ON THE CARDS

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *