ப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம்

ப்ரோ கபடி புதிய கட்டண சலுகை அறிமுகம்

சென்னை, அக்டோபர் 2018: தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி தொடரின் துவக்க ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ப்ரோ கபடி அணி தமிழ் தலைவாஸ், மூன்று முறை ப்ரோ கபடி தொடரில் சம்பியனான பாட்னா பைரேட்சை 42 – 26 என்கிற புள்ளி கணக்கில் தோற்கடித்து வெற்றியுடன் பயணத்தை துவங்கியுள்ளது.

இந்த போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகத்தினர் எஞ்சிய ஆட்டங்களுக்கு டிக்கட் விலைகளை 25% குறைத்துள்ளனர். இதற்கு முன்பாக தமிழ் தலைவாஸ் அணியினர் ஒரே விலையில் இரண்டு ஆட்டங்களையும் காணும் வகையில் ஒரு சலுகையை அறிவித்திருந்தனர், அந்த சலுகையை எஞ்சிய ஆட்டங்களுக்கு மீண்டும் நீட்டித்துள்ளனர். இதன் மூலம் ரசிகர்கள் 300 ரூபாயில் இரண்டு ஆட்டங்களையும் காண முடியும்.

இது வரை இந்த தொடரில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகளுடன் மோதியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, வருகிற ஆட்டங்களில் தெலுகு டைட்டன்ஸ், பெங்களூர் புல்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணி களுடன் மோதுகிறது.

ALSO READ:

Tamil Thalaivas announce 25% Discount for all home games

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *