ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அபிஷேக் பச்சன் துவைக்கி வைத்த ‘Chennaiyin FC Soccer School’

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அபிஷேக் பச்சன் துவைக்கி வைத்த ‘Chennaiyin FC Soccer School’

Chennaiyin Fc அணி வீரர்களுக்கான கல்வி பங்களிப்பை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அளிக்கும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் Jeppiaar Chennaiyin FC Soccer School தொடங்கப்பட்டு இதன் மூலம் சிறந்த கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியல் நடந்த நிகழ்ச்சியல் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் Regeena J Murali இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி நாடு முழுவது கல்விதுறையில் சிறந்தபங்காற்றி வருவதாக கூறினார்.

கல்வி துறையில் மட்டுமின்றி மாணவர்களின் திறமையை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபாதைக்கு அழைத்து செல்வதிலும் முக்கிய பங்காற்றிவருகிறது ஜேப்பியார் விளையாட்டுக் குழுமம். அதிலும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களின் ஆர்வத்தை கண்டறிந்து, குறிப்பாக ஓட்டப்பந்தையம், கைப்பந்து, போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான அடிப்படை நுனுக்கங்களை கற்பித்து அவர்களின் தனித்திறனை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கால்பந்து விளையாட்டில் இந்தியன் சூப்பர் லீக்கில் (ISL) விளையாடிவுரும் Chennaiyin FC அணி வீரர்களுக்கான கல்வி பங்களிப்பை அளிக்க ஜேப்பியார் பொறியியல் கல்லூரி முன்வந்துள்ளது.

அதாவது, கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க Jeppiaar Chennaiyin FC Soccer School தொடங்கப்பட்டுள்ளது. Jeppiaar Matric மற்றும் CBSE பள்ளி சங்கத்துடன் Chennaiyin FC நிர்வாகம் இணைந்து இந்த பள்ளியை நடத்தவுள்ளது. இதில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களும், விளையாட்டு நுனுக்கங்களை கற்க நினைப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் ஜேப்பியார் பள்ளியும் இணைந்து ஜேப்பியார் விளையாட்டுக் குழுமம் சார்பில், விளையாட்டில் ஆர்வமுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 450க்கும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான தங்கும்வசதி, கல்வி, விளையாட்டுக்கான பயிற்சிகள் மட்டுமின்றி உபகரணங்கள் மட்டுமின்றி உபகரணங்கள் அளித்து அவர்களை ஊக்கப்படுத்துகிறது நமது நிர்வாகம் .

அதிலும், கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பயன்படுத்தி, பல போட்டிகளில் வெற்றிபெற்று ஜேப்பியார் விளையாட்டு குழுமத்துக்கு அந்த வீரர்கள் பெறுமை சேர்த்துள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறந்த கால்பந்தாட்ட அணியாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணி திகழ்கிறது.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி கல்பந்தாட்ட அணி வீரர்கள், பல்வேறு கால்பந்தாட்ட கிளப்களில் விளையாடிவருகின்றனர். மேலும், இந்திய ரயில்வே, இந்தியன் வங்கி என மிக முக்கிய அணிகளில் தேர்வாகி விளையாடி வருகின்றனர். குறிப்பாக, திரு. பாண்டின் என்பவர் தற்போது Chennaiyin FC அணியில் தேர்வாகி விளையாடவுள்ளார்.

கால்பந்து மட்டுமின்றி மற்ற விளையாட்டிலும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. கபடி, வாலிபால், கை பந்து என அனைத்து விளையாட்டிலும் நம் கல்லூரி மாணவர்கள் தமிழகத்துக்கு உரிய அங்கிகாரத்தை பெற்றுத்தந்துள்ளனர். அண்மையில் கபடி விளையாட்டில் சிறந்த அணி என்றும், தேசிய அளவில் நடைபெற்று முடிந்த ஜூனியர் ப்ரோ கபடி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பெற்றது நமது அணி.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும், தயாரிப்பாளும், Chennaiyin FC அணியின் உரிமையாளர்களில் ஒருவரான திரு அபிஷேக் பச்சன், Chennaiyin FC அணியின் மற்றொரு உரிமையாளரும், 11EVEN Sports தலைவர் வீடா டானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ALSO READ:

ACTOR ABHISHEK BACHCHAN LAUNCHED CHENNAIYIN FC SOCCER SCHOOL AT JEPPIAAR ENGINEERING COLLEGE

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *