சாமி 2 விமர்சனம் ரேட்டிங் 3/5

சாமி 2 விமர்சனம்

ரேட்டிங் 3/5 

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் வந்துள்ள சாமி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி.
இதில் சீயான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு, ஜான்விஜய், ஓஏகே.சுந்தர், டெல்லி கணேஷ், சுமித்ரா, சுதா சந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு-வெங்கடேஷ் அங்குராஜ், படத்தொகுப்பு-வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், கலை-வி.சண்முகம்,பி.வி.பாலாஜி, சண்டை-சில்வா, நடனம்-பிருந்தா, தினேஷ், பாபாபாஸ்கர், மக்கள் தொடர்பு-பி.யுவராஜ்.
முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை செங்கல் சூலையில் எரித்துக் கொல்லும் ஆறுச்சாமியை பழி வாங்க இலங்கையில் இருக்கும் பெருமாள் பிச்சையின் மகன்கள் தெய்வேந்திரப் பிச்சை(ஜான் விஜய்), மகேந்திரப் பிச்சை (ஒஏகே சுந்தா);, ராவணப் பிச்சை (பாபி சிம்ஹா) ஆகியோர் திருநெல்வேலிக்கு வருகிறார்கள். திண்டுக்கல்லில் வேலை செய்யும்ஆறுச்சாமியையும்(விக்ரம்), நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி புவனாவையும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) கண்டுபிடித்து கொலை செய்கின்றனர். தாத்தா பாட்டியான டெல்லி கணேஷ் – சுமித்ரா தம்பதிகள் குழந்தையை காப்பாற்றி டெல்லிக்கு அழைத்து வந்து நன்றாக படிக்க வைக்கின்றனர். ராம்சாமி (விக்ரம்)ஐஏஎஸ் படித்துக் கொண்டே டெல்லி அமைச்சராக இருக்கும் பிரபுவின் உதவியாளராக பணிபுரிகிறார். அமைச்சரின் மகள் கீர்த்தி சுரேஷ் விக்ரமை காதலிக்க தொடங்குகிறார். காதலை ஏற்காமல் தவிர்த்து வருகிறார் விக்ரம். பின்னர் தாத்தா டெல்லி கணேஷிடமிருந்து தன் பெற்றோருக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து ஐபிஎஸ் வேலையை தேர்ந்தெடுத்து திருநெல்வேலிக்கே அசிஸ்டெண்ட் கமிஷனராக செல்கிறார். அங்கே ராவண பிச்சை சகோதர்கள் பெரிய புள்ளிகளின் கருப்பு பண மாற்றம் மூலம் சமூக விரோத கும்பலாக உருவெடுத்து திருநெல்வேலியையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கின்றனர். ராம்சாமி(விக்ரம்) வியூகம் அமைத்து எப்படி பெருமாள் பிச்சையின் மகன்கள் மூன்று பேரையும் வதம் செய்தார் என்பதே ஜிவ்வென செல்லும் க்ளைமேக்ஸ்.
ஆறுச்சாமி, ராம்சாமியாக தந்தை, மகன் என இருவேறு கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம்இளமையாக இன்றும் பழைய கம்பீர சீற்றமோடு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வந்து அதகளம் பண்ணுகிறார். காதல், மோதல், பழி வாங்குதல், கோபம் என்று பலமரிணாமங்களில் ஜொலித்து மனதில் நிற்கிறார் விக்ரம்.
முதல் பாகத்தில் த்ரிஷாவிற்கு பதில் இரண்டாம் பாகத்தில் புவனாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபத்துடன் இறந்து போகிறார். கீர்த்தி சுரேஷ் காதல் செய்வதற்கும், பாடல் காட்சிகளுக்கும், வில்லன்கள் கடத்தி செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
பாபி சிம்ஹா வில்லன் ராவணபிச்சையாக பழி வாங்கும் இறுக்கமான முகபாவத்தோடு படம் முழுவதும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.
கீர்த்தி சுரேஷின் மாமா சக்தியாக வரும் சூரி காமெடி என்ற பெயரில் அடிக்கும் காட்டுக் கூச்சலாக கத்தும் வசனங்கள் சிரிக்க வைக்கவில்லை எரிச்சலடைய வைக்கிறது. படத்திற்கு சூரியின் காமெடி மைனசாக அமைந்துள்ளது.
மத்திய அமைச்சர் விஸ்வநாதனாக வரும் பிரபு, வில்லன்களாக வரும் ஜான் விஜய், ஓஏகே சுந்தர், தாத்தா ஸ்ரீனிவாசனாக வரும் டெல்லி கணேஷ், பாட்டியாக வரும் சுமித்ரா, சுதா சந்திரன், கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா ஆகியோர் படத்திற்கு பலம்.
தேவி ஸ்ரீPபிரசாத் இசையில் மொளகாப் பொடியே, டர்ணக்கா, அதிரூபனே பாடல்கள் ஆட்டம் போட வைத்து டிரெண்டிங்கில் உள்ளது. விக்ரமும், கீர்த்திசுரே{ம் இணைந்து பாடிய மெட்ரோ ரயில் பாடல் நடனத்திலும் தூள் கிளப்புகிறது. பின்னணி இசை இரைச்சலுடன் இருக்கிறது.
வெங்கடேஷ் அங்குராஜ் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை சாமர்த்தியமாக கையாண்டு ஆக்ஷன் படத்திற்கே உரித்தான காட்சிக்கோணங்களில் பிரம்மாண்டத்தை காட்டி அசத்தியிருக்கிறார்.
வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் ஆகிய இருவரும் அழகாக படத்தொகுப்பை கொடுத்ததுடன், சில்வாவின் அதிரடி சண்டைக் காட்சிகள் அலர வைக்கிறது.
எழுத்து, இயக்கம்-ஹரி. 2003ல் வெளிவந்த சாமி படத்தின் முதல் பகுதி ஹீரோ தந்தைக்கும், வில்லன் தந்தைக்கும் நடக்கும் பழி வாங்கும் போராட்டத்தை சொல்ல, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாமியின் இரண்டாம் பகுதி ஹீரோ மகனுக்கும், வில்லன் மகனுக்கும் நடக்கும் பழி வாங்கும் படலத்தை தொடர்ந்திருக்கிறார். விறுவிறுவென நகரும் எதிர்பார்த்த காட்சிகள், சலிக்கும் காமெடி, இயக்குனர் ஹரிக்கே உரித்தான போலீஸ் திரைக்கதையை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது. இறைச்சலான வசனங்களால் படத்தில் அனைவரும் கத்திக்கொண்டே இருப்பது போல் உணர்வு மேலிடுகிறது. இருந்தாலும் ஹரியின் இயக்கத்தில் படம் தோய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. இறுதியில் சாமியின் வேட்டை தொடரும் என்று சொல்லியிருப்பது மூன்றாம் பாகத்தில் விக்ரம் பேரனாக வருவாரோ என்னமோ?
விக்ரமின் சாமி 2 அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கலாம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *