SRMISTயில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்வில் ஒரே நாளில் 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

SRMISTயில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்வில் ஒரே நாளில் 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புக்கான நேரம் இது.SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விநிறுவனம் இந்திய அளவில் தலைசிறந்த முன்னனி நிறுவனங்களை வேலைவாய்ப்பு முகாமிற்கு அழைத்துள்ளது.சென்ற ஆண்டு 540தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளி தந்த்து குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில் டிசிஎஸ் ,இன்போசிஸ் ,கானிசன்ட் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மூவாயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளது.
மாணவர்களின் கனவு நிறுவனங்கள் வரிசையில் உள்ள டிசிஎஸ் டிஜிட்டல் நிறுவனம் 62 மாணவர்களுக்கும் மற்றும் இன்போசிஸ் 64 மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குகிறது.
முதன்முறையாக பதினைந்து தாய்வான் தொழில் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்க உள்ளது.மாணவர்களின் கனவு நிறுவனங்களில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 38.5இலட்சம் சம்பளத்தில் வேலை வழங்கவுள்ளது.அதேபோல் அமேசான் நிறுவன 16மென்பொருள் உருவாக்க பொறியாளர்களுக்கு வேலை வழங்குகிறது.பெங்களூரை சேர்ந்த உதான் நிறுவனம் மூன்று மாணவர்களுக்கு ஆண்டுக்கு 18.5இலட்சம் ஊதியத்துடன் வேலை வழங்கவுள்ளது.பெங்களூரு நியுடாநிஸ் நிறுவனம் இரண்டு மாணவர்களுக்கு 18.1இலட்சம் ஊதியத்திலும் சாப் லாப் ஒரு முதுநிலை மாணவருக்கு ஆண்டிற்கு 17இலட்சம் ஊதியத்துடன் வேலை வழங்கவுள்ளது.
குறிப்பிட்டுள்ள அனைத்து மாணவர்களின் கனவு நிறுவனங்கள் மாதம்தோறும் அவர்களுக்கான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகளுல் ஒன்று 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 3200பேராசிரியர்கள் உலக தரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை வழங்கி கொண்டிருக்கிறது.SRM கல்விக் குழுமம் 8வளாகங்களை தமிழ்நாட்டில் 4கும் பிற மாநிலங்களான ஆந்திரா ,தில்லி ,சிக்கீம் மற்றும் சோனாபெட் ஆகிய இடங்களிலும் உள்ளது.பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் NAAC இந்த ஆண்டு A++ தரச்சான்று வழங்கி கௌரவித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

ALSO READ:

Campus Placements off to a flying start @ SRMIST – Over 3000 offers made on Day1!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *