யு டர்ன் சினிமா விமர்சனம்

யு டர்ன் சினிமா விமர்சனம்

ரேட்டிங் 3.5/5 

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய்.கம்பைன்ஸ் பிஆர் 8 கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் ஸ்ரீனிவான சித்தூரி, ராம்பாபு பண்டாரு இணைந்து தயாரித்து கிரியேடிவ் எண்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரீபியூடர்ஸ் கோ.தனஞ்செயன் வெளியீட்டில் வந்துள்ள படம் யு டர்ன்.
இதில் சமந்தா அக்கினேனி. ஆதி பினிசெட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், ஆடுகளம் நரேன், பூமிகா சாவ்லா ஆகியோரின் வித்தியாசமான நடிப்பில் யு டர்ன் படத்தை இயக்;;;;;கியிருக்கிறார் பவண் குமார்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-நிக்கேத் பொம்மிரெட்டி, இசை-பூர்ண சந்திர தேஜஸ்வி, படத்தொகுப்பு – சுரேஷ் ஆறுமுகம், வசனம் – கவின் பாலா, கலை இயக்கம்-பிரகாஷ், மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.
பிரபல ஆங்கில நாளிதழில் பயிற்சி பத்திரிகையாளராக பணிபுரிகிறார் சமந்தா. தன்னுடன் பணிபுரியும் சீனியர் க்ரைம் பத்திரிகையாளரான ராகுல் ரவீந்திரனை முதலில் நட்புடன் பழகி காதலிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதனிடையே வேளச்சேரி பாலத்தில் நடுவில் இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யு டர்ன் எடுக்கும் நபர்களால் விபத்துக்கள் ஏற்படுவதைப் பற்றி கட்டுரை எழுத நினைக்கிறார். அதற்காக அந்த பாலத்தில் எப்பொழுதும் பிச்சை எடுக்கும் நபரை தேர்ந்தெடுத்து யார் யு டர்ன் போட்டாலும் இரு சக்கர வாகனத்தின் நம்பரை குறிப்பெடுத்து தரும்படி கூறி அதற்கு பணமும் கொடுக்கிறார். அதன்படி கிடைக்கும் வண்டி நம்பரை வைத்து முகவரி கண்டுபிடித்து பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த பிளாட்டில் அழைப்பு மணி அடித்தும் யாரும் வராததால் திரும்பி சென்று விடுகிறார். அதன் பின் நண்பர் ராகுலுடன் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் போலீஸ் சமந்தாவை கைது செய்து அழைத்துச் செல்கிறது. பிளாட்டில் தேடிச் சென்ற நபர் இறந்து கிடக்கவே சமந்தா தான் கொலை செய்திருப்பார் என்று போலீஸ் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் விசாரிக்கச்சொல்கிறார்.சமந்தாவை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஆதியிடம் தன்னிடம் இருந்த பத்து நம்பர்களை கொடுத்து தன்னுடைய வேலையைப் பற்றிச்சொல்கிறார். அந்த பத்து நம்பர்களின் உள்ள நபர்களை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஆதிக்கு அனைவரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர் என்பதையறிந்து அதிர்ச்சியாகிறார். சமந்தா கொலை செய்தாரா? கொலையா? தற்கொலையா? செய்தது யார்? காரணம் என்ன? சமந்தா இந்தக் கொலைப்பழியிலிருந்து தப்பித்தாரா? உண்மையான காரணத்தை கண்டுபிடித்தாரா? என்பதே த்ரிலில்லிங்கான யு டர்ன் படத்தின் க்ளைமேக்ஸ்.
ரட்சனா இளம் பத்திரிக்கையாளராக பாப் கட்டுடன் தலைமுடி, முக்குத்தி, சிம்பிளான மாடர்ன் உடையுடன் வலம் வந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய முகபாவங்களினால் மனதை அள்ளுகிறார். திருமணத்திற்கு நச்சரிக்கும் அம்மாவை சமாளித்து அனுப்புவது, தன் தோழியிடம் காதலிக்க ஐடியா கேட்பது, ராகுல் ரவீந்திரனை தன் வசம் இழுப்பது என்று நார்மளாக செல்லும் கதை திடீரென்று போலீஸ் ஸ்டேஷனிலே அடைப்பட்டு தன்னுடைய வாழ்க்கை யு டர்ன் ஆவதை சமாளிக்கும் சாதுர்யமான பெண்ணாக வலம் வருகிறார். போலீஸ் ஸ்டேஷனில் யாரும் உண்மையை நம்பாத போது இறுதியில் ஆதியிடம் நீங்களாவது நம்பினீர்களே என்ற தன் ஆதாங்கத்தை சொல்லும் இடம் கை தட்டல் பெறுகிறது. சமந்தாவின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக ;அமைந்து வெற்றிக்கு வழி வகுக்கிறது.
மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயக்காக வரும் ஆதி, சமந்தாவிற்கு உதவப்போய் சஸ்பெண்ட் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் உண்மையை வெளிக்கொணர பாடுபடும் இளைஞராக மனதில் நிற்கிறார்.
ஆதித்யாவாக காதலராக வரும் ராகுல் ரவீந்திரன், உயர் போலீஸ் அதிகாரி சந்திரசேகராக ஆடுகளம் நரேன், ரித்தேஷாக நரேன், அவரின் மனைவி மாயாவாக பூமிகா சாவ்லா மற்றும் பலரின் நடிப்பு அற்புதம்.
நிக்கேத்பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு திகிலான காட்சிகளுக்கும், த்ரில்லிங்கான அனுபவத்திற்கும் உத்திரவாதம். விசாரித்து விட்டு வெளியே வரும் ஆதியும், சமந்தாவும் செல்லும் காரின் மேலே திடீரென்று விழும் நபரால் அதிர்ச்சியாவது அவர்கள் மட்டுமல்ல நாமும் தான். அதன் பின் நான்ஸ்டாப்பாக செல்லும் விறுவிறுப்பான த்ரில் கதைக்கு காட்சிக் கோணங்களில் உயிர் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிக்கேத் மொம்மிரெட்டி.
பூர்ண சந்திர தேஜஸ்வி க்ரைம் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் இசையால் கொடுத்து திகிலடைய வைக்கிறார்.
கவின் பாலாவின் வசனமும், சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பும் படத்திற்கு கச்சிதம்.
இயக்கம்-பவண்குமார். கன்னட வெற்றிப் படங்களாக லூசியா, யு டர்ன் படத்தை தந்தவர். இதில் யு டர்ன் படத்தை தமிழிலும் இயக்கி முதல் முறையாக தமிழ் படத்தின் இயக்குனராக களம் இறங்கி முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. சாலைத் தடுப்புக்களை அகற்றி தங்கள் சௌகர்யத்திற்காக யு டர்ன் எடுத்துச் செல்லும் நபர்களால் எதிரே வருபவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறுவதை க்ரைம், த்ரில்லர் கலந்து உண்மையை சமூதாய அக்கறையோடு உரக்கச் சொன்ன இயக்குனர் பவண் குமாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் இந்த வெற்றி. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் திரைக்கதை, யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த க்;ளைமேக்ஸ் திகில் அனுபவத்தை கொடுத்து வித்தியாசமான இயக்கத்தால் பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் பவண்குமார். வெல்டன்.

மொத்தத்தில் அனைவரும் குடும்பத்தோடு சென்று திரும்ப திரும்ப யு டர்ன் போட்டு க்ரைம் நிறைந்த திகிலான பயணத்தில் பார்த்து மகிழலாம்.

Please follow and like us: