ஹிந்தி திவாஸ் – 2018

ஹிந்தி திவாஸ் – 2018

காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் ஹிந்தித்துறை நேற்று (14/09/18) ஹிந்தி திவாஸ் நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவில் 2018 ஆம் ஆண்டுக்குரிய மிஸஸ் வட இந்தியா என்னும் பட்டத்தினை குடியரசுத் தலைவர் கையால் பெற்ற திருமதி காஞ்சன் ஷர்மா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தனது சிறப்புரையில் இந்திய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழியும் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. அதனை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் கடமையை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர், இணை துணை வேந்தர் முனைவர் இர. பாலசுப்பிரமணியன், பதிவாளர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் கலந்துகொண்டு தத்தம் வாழ்த்தினைத் தெரிவித்தனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. நிறைவாக ஹிந்தித் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பிரீத்தி அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.

ALSO READ:

SRMIST celebrated Hindi Diwas – 2018

Please follow and like us: