அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

ரேட்டிங் 2.5/5 

கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். கதிரவன் தயாரிப்பில், ஏ.கேசவன் எழுத்து , இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அவளுக்கென்ன அழகிய முகம்.
இதில் பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன் , சத்யா, சபரி, நிவிஷா, விஜய் கார்த்திக் , ரூபாஸ்ரீ, யோகிபாபு , பவர் ஸ்டார் சீனிவாசன் , டி.பி. கஜேந்திரன் , சுப்பு பஞ்சு அருணாச்சலம், அம்மு ராமசந்திரன் , ரவி வெங்கட்ராமன் , சம்பத் ராம் இந்து ரவி , பாண்டு,வெங்கல் ராவ் , ‘பாய்ஸ்” ராஜன் , நெல்லை சிவா , சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை-டேவிட் ஷோரன், ஒளிப்பதிவு-நவநீதன், பாடல்கள்-வைரமுத்து, எடிட்டர்-கோபிகிருஷ்ணா,கலை-எட்வர்ட் கென்னடி, சண்டை-எஸ்.ஆர்.முருகன், நடனம்-சங்கர், தயாரிப்பு நிர்வாகி-அன்புச்செல்வன், பிஆர்ஒ-ஜான்சன்.
காதலில் தோல்வி அடைந்த மூன்று பேர் நண்பர்களாகிறார்கள். தங்கள் சோகக் கதையை பகிர்ந்து கொள்ளும் போது உண்மையான காதல் ஜோடியை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்கள். பிரிந்த காதல் ஜோடிகளான பூவரசன்-அனுபமா பிரகாஷ் கதையை கேட்டு அவர்களை சேர்த்து வைக்க பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனோடு பயணமாகிறார்கள். காதல் ஜோடிகளை மூன்று நண்பர்களும் பெற்றோர் சம்மதத்துடன் சேர்த்து வைத்தார்களா? என்பதே மீதிக்கதை.
புதுமுகங்களான பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன் , சத்யா, சபரி, நிவிஷா, விஜய் கார்த்திக் , ரூபாஸ்ரீ ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். காமெடிக்கு யோகிபாபு , பவர் ஸ்டார் சீனிவாசன் , டி.பி. கஜேந்திரன், பூவரசனின் அண்ணனாக சுப்பு பஞ்சு அருணாச்சலம், அண்ணியாக அம்முராமசந்திரன், ரவி வெங்கட்ராமன், சம்பத் ராம் இந்து ரவி , பாண்டு,வெங்கல் ராவ் , ‘பாய்ஸ்” ராஜன் , நெல்லை சிவா , சுப்புராஜ் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் காமெடிக்கும், காதலுக்கும் உத்தரவாதம்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களில் டேவிட் ஷோரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி ரசனையோடு கொடுத்திருக்கிறார்.
நவநீதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
எழுத்து, இயக்கம்-ஏ.கேசவன். மூன்று நண்பர்களின் ஏடாகூடமான காதலை சொல்லி பின்னர் உண்மையான காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் சற்று வித்தியாசமான திரைக்கதை அமைத்திருப்பதிலேயே இயக்குனர் ஏ. கேசவன் மனதில் நிற்கிறார். அதன் பின் கொஞ்சம் காமெடி, சென்டிமெண்ட் கலந்து போரடிக்காமல் காட்சிகளை அமைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார் ஏ,கேசவன்.

மொத்தத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் காதலை வரவேற்கும் படம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *