எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி வளாகத்தில் ஆயுத்’18

எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி வளாகத்தில் ஆயுத்’18

சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 09/09/2018 , ஞாயிற்று கிழமை அன்று ஆயுத்’18 என்ற விழாவினை கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் வடபழனி வளாக ரோட்டராக்ட் சங்கம் இணைந்து நடத்தியது.

இவ்விழாவிறக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர், நடிகர் திரு. மனோபாலா மற்றும் திரு. ரவிமரியா பங்கேற்றனர். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழாவில் விஜய் டி.வி. புகழ் திரு.மா.கா.பா.ஆனந்த் மற்றும் பாடகி நித்யஸ்ரீ பங்கு பெற்றனர். இவ்விழாவில் மூலம் ஈட்டிய வருவாயை SIMS மருத்துவமனை, வடபழனி உதவியுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ சிகிச்சை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். திரு. க. துரைவேலு மற்றும் துறைத் தலைவர்கள் வழிகாட்டுதலுடன், இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் திரு. ஜி. ராமன் மற்றும் திரு. எஸ். விக்னேஷ்,ரோட்டராக்ட் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் உதவியுடன் ஒருக்கினைத்து நடத்தினர்.

ALSO READ:

SRMIST organized a Cancer Awareness fund raising event – AYUDH’18

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *