தொட்ரா சினிமா விமர்சனம்

தொட்ரா சினிமா விமர்சனம்

ரேட்டிங் 2.5/5 

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் தொட்ராவை எழுதி இயக்கியிருக்கிறார் மதுராஜ்.

இந்தப்படத்தில் பிருத்விராஜ், வீணா, எம்.எஸ்.குமார், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், முருகன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம்அபூர்வாசஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஆர்.என்.உத்தமராசா, ஒளிப்பதிவு-வி.செந்தில்குமார், படத்தொகுப்பு- ராஜேஷ் கண்ணன், பிஆர்ஒ-ஜான்.

ஏழ்மையான கல்லூரி மாணவன் பிருத்விராஜ் தன்னுடம் படிக்கும் பணக்கார பெண் வீணாவை காதலிக்கிறார். வீணாவின் அப்பாவும். அண்ணனும் ஜாதி வெறி பிடித்தவர்கள், கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்கள். பிருத்விராஜ்-வீணாவின் காதலை அறிந்தவுடன் காதலர்களை பிரித்து வீணாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். வீணா பிருத்விராஜுடன் வீட்டை விட்டு ஒடி திருமணம் செய்து கொள்கிறார்.

வர்களின் காதலுக்கு ஆதரவு கொடுக்கிறார் ஏ.வெங்கடேஷ். அதே சமயம் வீணாவின் அண்ணனிடம் பணம் கேட்டு ஏ.வெங்கடேஷ் பேரம் பேசுகிறார். வீணாவின் அண்ணனும் காதலர்களை தேடி கண்டுபிடிக்கிறார். இறுதியில் காதலர்களை பிரித்தார்களா? இல்லை காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே க்ளைமேக்ஸ்.

வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் எம்.எஸ்.குமார். இவரின் அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் கனக்கச்சிதம், இவரின் நடிப்பு அபாரம்.
பிருத்விராஜ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்.

வீணா அறிமுக நடிகையாக இருந்தாலும், அழகாலும், நடிப்பாலும் வசியம் செய்கிறார்.
வில்லனாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், முருகன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.

ஆர்.என்.உத்தமராசா இசையும், வி.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் அசத்தல்.
இயக்கம்-மதுராஜ். முதல் படத்திலேயே ஜாதி கலப்பு காதல் திருமணத்தை சொல்லி ;அதனால் குடும்பத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள், அவமானங்கள், அடைக்கலம் கொடுக்கும் பெயரில் நடக்கும் அட்டூழியங்களை திறம்பட சொல்லியிருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் சில இடங்களில் குறைந்து, ஊகிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மதுராஜ். கலப்பு திருமணத்திற்காக குரல் கொடுத்து பிரச்னைகளை அலசி காதல் மோகம் வியாபாரம் ஆக்கப்படுவதை சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் இயக்குனர் மதுராஜ்.

மொத்தத்தில் கலப்பு காதலால் ஏற்படும் ஆணவக்கொலையை சொல்லும் படம் தொட்ரா.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *