‘தி கால் ஆஃப் ப்ளூ’ – மல்டிபிள் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் மற்றும் ரைடிங்க் அசெம்பிளி நிகழ்ச்சி

‘தி கால் ஆஃப் ப்ளூ’

~ மல்டிபிள் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் மற்றும் ரைடிங்க் அசெம்பிளி நிகழ்ச்சி ~

சென்னை: 2018 செப்டம்பர் 8 : ‘தி கால் ஆஃப் ப்ளூ’ என்னும் இந்திய யமாஹா மோட்டார் நிறுவனத்தின் புத்தம் புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த பிராண்ட் இன்று சென்னை ஈசிஆர் ஸ்பீட்வேயில் தனது முதன் முதல் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் நிகழ்வை நிறைவு செய்துள்ளது. யமாஹாவின் ‘அசத்தல், ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டி’ என்னும் உலகளாவிய இமேஜுடன் ஒத்திசையும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் யமாஹாவின் துணைக் கருவிகள் காட்சிப்படுத்துதல் & விற்பனை, வாடிக்கையாளர்களின் யமாஹா விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்துதல், ஜிம்கானாவின் டிராக் ரைடிங்க், டெஸ்ட் ரைட், பொழுதுபோக்கு அம்சங்கள் நிகழ்ச்சியில் இடம் பெறும்.

புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் நோக்கங்களைத் தெளிவுபடுத்த, நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ஜிம்கானா ரைடிங்க் டிராக் டெஸ்ட் ரைட்களில் பங்கேற்ற வாடிக்கையாளர்கள் தங்களின் யமாஹா விண்டேஜ் மோட்டார் சைக்கிள்களை உண்மையான யமாஹா துணைக் கருவிகளுடன் காட்சிப்படுத்தினர். மோட்டார் சைக்கிளிங்க் செயல்பாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் யமாஹா வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் பங்கேற்று யமாஹா இரு சக்கர வாகன உரிமையாளராக இருக்கும் பெருமிதத்தைப் பகிர்ந்து கொண்டனர். வாடிக்கையாளரின் இந்தப் பெருமிதமும் பங்கேற்புமே, அசத்தல், ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டியை உள்ளடக்கிய ‘தி கால் ஆஃப் ப்ளூ’ பிராண்ட் பிரச்சார நோக்கமாகும்.

தேசிய அளவிலான பிராண்ட் பிரச்சாரஅறிவிப்பின் போது யமாஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் மோடோஃப்யூமி ஷிதாரா கூறுகையில் ‘யமாஹா உலகளாவிய கார்பொரேட் மிஷனான ‘கண்டோ’ என்பது உணர்வைத் தனது அனைத்துப் பொருள்கள் அல்லது தொடர்பான அனுபவங்கள் மூலம் அடைய வேண்டும் என்பதே. #வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை பிராண்ட்# ஆகத் திகழ்வதால் எங்களது முதல் கடமை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களது நீண்ட கால வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். “தி கால் ஆஃப் தி ப்ளூ” பிரச்சார அறிமுகம் மூலம் யமாஹா வாடிக்கையாளர் அல்லது வேறு எந்த இரு சக்கர வாகன வாடிக்கையாளரிடமும் மிக உயரிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், அசத்தல் ஸ்டைலையும், அளிக்கும் பிராண்டின் உறுதிப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரச்சார அடிப்படையில் அறிமுகமாகும் அனைத்தும் பொருள்களும் யமாஹாவின் வித்யாசத்துடன் சுகமான அனுபவத்தையும் இணைத்தே வாங்கும்’ என்றார்.

அவர் மேலும் தொடர்கையில் ‘யமாஹாவின் மிகப் பெரிய சந்தையாக விளங்கும் சென்னையின் ஓட்டும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பிராண்ட் எங்கேஜ்மெண்ட் நிகழ்வை இணைத்து கொண்டாடுவதில் யமாஹா மகிழ்ச்சி அடைகிறது. யமாஹா வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற முனைவுகள் மூலம் அளிக்கப்படும் குதூகலமும், ஸ்டைலுமே எங்களது ‘கண்டோ’ உணர்வுக்கு ஊக்கமளிக்கிறது’ என்றார்.

ALSO READ:

Yamaha’s ‘The Call of the Blue’ hosts electrifying event in Chennai

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *