‘அவள்’ படத்தை நானே பார்க்க மாட்டேன்: ஆண்ட்ரியா விளக்கம்

‘அவள்’ படத்தை நானே பார்க்க மாட்டேன்: ஆண்ட்ரியா விளக்கம்

சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அவள்’. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார் சித்தார்த்.

‘அவள்’ என பெயரிட்டுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் தயாராகியுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை மிலிண்ட் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

சித்தார்த் பேசும்போது, ‘அதுல் குல்கர்னியுடன் 12 வருடத்திற்கு பிறகு நடித்தது மிகவும் சந்தோஷம். இப்படத்தின் இயக்குனரும் நானும் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினோம். அந்த நட்பின் வளர்ச்சி தான் தற்போது ‘அவள்’ படமாக வந்திருக்கிறது. இந்த படத்தை நானும் சேர்ந்து தயாரித்திருக்கிறேன்.

சில தினங்களுக்கு முன் வெளியான ‘அவள்’ படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திகிலில்  உறையவைக்கும் ஒரு உண்மையான  பேய் படத்தை காண உள்ளோம்  என்ற எண்ணத்தை  மக்கள் மத்தியில்  விதைத்துள்ளோம். ஹாலிவுட் படங்கள் பல, மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், இந்தியப் படங்கள் அந்தளவிற்கு இல்லை. இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒருபடம் எடுக்க நினைத்தேன். அதுதான் ‘அவள்’ படமாக உருவாக்கி இருக்கிறேன். நிச்சயம் அனைவரையும் பயமுறுத்தும் படமாக இருக்கும். டீஸர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும்  இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறோம்’ என்றார்

ஆண்ட்ரியா பேசும்போது, ‘வித்தியாசமான கதைகள் என்னைத் தேடி தேடி வருகிறது. கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. இருந்தாலும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குனர் மிலிண்ட் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி. பேய் படங்களை பார்க்க எனக்கு ரொம்ப பயம். அதனால் இந்த படத்தை நானே பார்க்க மாட்டேன். இந்த படத்தை ரொம்ப பயப்படுமளவிற்கு எடுத்திருக்கிறார்கள். கோலிவுட்டில் இந்த மாதிரி படம் வந்ததில்லை. டெக்னிக்கல் அளவில் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.

Please follow and like us: