கலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி: ‘60 வயது மாநிறம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் பேச்சு! 

கலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி: ‘60 வயது மாநிறம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் பேச்சு! 

கன்னடத்தில் வெளியான ‘கோதி பன்னா சதஹர்னா மைகட்டு’ படத்தின் ரீமேக்காக  தமிழில் உருவாகிறது ‘60 வயது மாநிறம்’. இதில் அல்சைமர் எனும் மறதி நோயால் பாதித்தவராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அவரை தேடும் மகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார்.

பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

மொழி பட இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார்.

இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

பிரசாத் ஸ்டூடியோவில் ‘60 வயது மாநிறம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் ட்ரெயிலரை பிரகாஷ்ராஜ் வெளியிட்டார். இயக்குனர் ராதாமோகன், விக்ரம் பிரபு, இந்துஜா, குமரவேல் (நடிகர்), விஜி (வசனகர்த்தா) உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் உடன் இருந்தனர்.

அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது,

தேடல் பற்றிய ஒரு கதை. காணாமல் போனவர்களை தேடுகிறோமா இல்லை தொலைத்தவர்களைத் தேடுகிறோமா…?’ என்பது தான்  படத்தின் மையக்கரு. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது. இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன்.

ஈர்க்கக்கூடிய ஒரு விஷயத்தை காமெடியுடனும், தாக்கத்தை ஏற்டுத்தும்படியும் காட்டுவதற்கு ராதாமோகன் – விஜியால் மட்டுமே முடியும். ராதாமோகனை ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு நண்பராக தான் அதிகமாக பார்க்கிறேன். அவர் உலகத்தை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது.

நானும் ராஜமோகனும் இணைந்தால் அது ஒரு சுந்தரக் கலவை என்று சொன்னார் கலைப்புலி எஸ்.தாணு. குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கக் கூடிய படம் தரும் ராதா மோகன் ஒரு பலம் என்றால் இசை ஞானி இளையராஜா ‘மெகா’ பலம். அப்பா – பிள்ளை (எனக்கும்–விக்ரம் பிரவுக்கும்) இடையிலான ஒரு உறவை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லி இருக்கும் சித்திரம் உன்னத படைப்பாக வந்திருக்கிறது ‘60 வயது மாநிறம்’.

‘ஞாபகம் இழக்கும் ஒரு நோயை’ அடிப்படையாகக் கொண்ட கதையில் விக்ரம்பிரபு வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது என்றார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். மறுப்பு சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது.

முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். இன்றைய தேதியல் ஒரு படம் எடுப்பது கஷ்டம். எடுத்தாலும் வியாபாரம் செய்வது அதைவிடக் கஷ்டம். அப்படியே வியாபாரமும் நடந்து விட்டால்… நல்ல நல்ல தியேட்டர்கள் கிடைத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கஷ்டம். இது தான் இன்றைய துர்பாக்கிய நிலைமை ஆகிவிட்டது. மேலும் அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன்வந்தார்.  கலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி என்பதால் அவரையே தயாரிக்கும்படி முழு உரிமையையயும் அவருக்கே தந்துவிட்டேன்’. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.

நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை. இளைராஜா சார் என்னை தொடர்புகொண்டு எனது குரல் வேண்டும் என்று மட்டும் தான் கேட்டார். மற்றபடி ராதாமோகன் எனக்காக டப்பிங் பேசினார்.

இவ்வாறு  பிரகாஷ்ராஜ் பேசினார்.

மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு வரவேற்றார்.

Please follow and like us: