ஒடு ராஜா ஒடு விமர்சனம்

ஒடு ராஜா ஒடு விமர்சனம்

ரேட்டிங் 2.5/5

விஜய் மூலன் டாக்கீஸ் வழங்கும் கேண்டில் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படம் ஒடு ராஜா ஒடு.
இதில் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம், லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரவிந்திர விஜய், பேபி ஆர்.ஹரிணி, நாசர், மெல்வின் எம்.ரஞ்சன், அருண்மொழி சிவபிரகாசம், ஆனந்த்சாமி, ஆஷிகா செல்வம், அபிஷேக் கே.எஸ்.,மாஸ்டர் ஏ. ராகுல், வெங்கடேஷ் ஹரிநாத், வினு ஜான், சோனா ஹைடன் ஆகியோர் நடித்து நிஷாந்த் ரவிந்திரன் மற்றும் ஜதின் சங்கர் ராஜ் இயக்கியிருக்கும் படம் ஒடு ராஜா ஒடு.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை, எடிட்டிங்-நிஷாந்த் ரவிந்திரன், இசை-தோஷ்நந்தா, ஒளிப்பதிவு-ஜதின் சங்கர் ராஜ், சுனில் சி.கே. பிஆர்ஒ-பி.டி.செல்வகுமார்.
குரு சோமசுந்தரம் டைரக்டராக வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் சும்மா இருக்க, கோபக்கார மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். மனைவி வீட்டில் செட் பாக்ஸ் வாங்க குருவிடம் பணம் கொடுக்க, தன் நண்பருடன் செல்லும் குருவிடமிருந்து பணம் காணாமல் போய்விடுகிறது. அதைத் தேடிச்செல்லும்போது கஞ்சா சப்ளை செய்யும் நண்பர்கள், ரிடையரான தாதா நாசர், அவரின் தாதா தொழிலை கைப்பற்ற நினைக்கும் தாதாவின் தம்பி ரவீந்திர விஜய், பிக்பாக்கெட் பொடிசுகள், பசங்களுக்கு உதவும் சிம்ரன் என்று நான்கு கிளைக் கதைகளின் சம்பவங்களின் இறுதியில் காணாமல் போன செட்பாக்ஸ் பணத்தை குரு சோமசுந்தரம் போராடி எப்படி கண்டுபிடித்தார்? என்பதே பல இடியாப்ப சிக்கல் நிறைந்த நிறைவான கதை.
தன் இயல்பான நடிப்பில் எப்பொழுதும் ஸ்கோர் செய்யும் குரு சோமசுந்தரம், கோபக்கார மனைவியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி, தாதாவாக நாசர், ரவிந்திர விஜய், பேபி ஆர்.ஹரிணி, மெல்வின் எம்.ரஞ்சன், அருண்மொழி சிவபிரகாசம், ஆனந்த்சாமி, ஆஷிகா செல்வம், அபிஷேக் கே.எஸ்.,மாஸ்டர் ஏ. ராகுல், வெங்கடேஷ் ஹரிநாத், வினு ஜான், சோனா ஹைடன் ஆகியோரின் நடிப்பு படத்தின் பல இக்கட்டான காமெடி கலந்த காட்சிகளுக்கு இவர்களின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
திரைக்கதை, எடிட்டிங் செய்த நிஷாந்த் ரவிந்திரன், சிறப்பான இசை கொடுத்த தோஷ்நந்தா, இரட்டை ஒளிப்பதிவாளர்கள்; ஜதின் சங்கர் ராஜ், சுனில் சி.கே. ஆகியோரின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்திரவாதம்.
இயக்கம் – நிஷாந்த் ரவிந்திரன் , ஜதின் சங்கர் ராஜ். டைட்டிலை போன்றே படம் முழுவதும் ஒடுவதும், துரத்துவதும் என்று சுறுசுறுப்பான காட்சிகளோடு முதலில் குழப்பமாக இருந்தாலும் பின்னர் வரும் திரைக்கதையின் தெளிவால் நான்கு சம்பவங்களை இரண்டாம் பாதியில் ஒன்றாக சம்பவிக்கும் போது பல புள்ளிகளை இணைத்த கோலம் போல் அழகாக வரைந்து பட்டை தீட்டி வித்தியாசமான இயக்கத்தால் வர்ண ஜாலம் செய்திருக்கிறார்கள் இயக்குனர்களான நிஷாந்த் ரவிந்திரன், ஜதின் சங்கர் ராஜ். இவர்களின் கடின முயற்சிக்கும், உழைப்பிற்கும் வெற்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ஒடு ராஜா ஒடு அனைவரும் தியேட்டரில் படம் பார்த்து ரசிக்க ஒடலாம்.

Please follow and like us: