கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்

கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன் 

10 மீட்டர் தூரம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல், 70 மீட்டர் தூரம் அம்பு எய்து 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

 சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த லாவன்யா என்பவர் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலணாய்வுதுறை கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சமரன் சர்வேஷ் தியாகராய நகரில் உள்ள பிஎஸ்பிபி எனும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.  சமரன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதலே அம்பு எய்தல் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
 9 வயதே ஆன சமரன் 11-08-2018 அன்று சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைக் பல்கலைகழக எம்.ஜி.ஆர். உள் விளையாட்டு அரங்கில் இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி முன்னிலையில் கண்களை கட்டிய நிலையில் 10 மீட்டர் தூரம் அம்பு எய்தும், கண்களை திறந்தபடி 70 மீட்டர் தூரம் அம்பு எய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு என ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைத்தார்.
இரண்டு சாதனைகளை படைத்த சிறுவன் சமரன் சர்வேஷ்க்கு இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன், பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பின்னர் பேசிய இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி: இந்தியாவிலேயே ஒரே நாளில் சிறு வயதில் கண்கட்டியபடியும், கண்களை திறந்தபடியும் இரண்டு சாதனைகளை செய்தது இதுவே முதல் முறை என தெரிவித்து பெருமிதம் கொண்டார்.
 இதேபோல் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன், பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் இரண்டு சாதனைகளை படைத்த சிறுவன் சமரன் சர்வேஷை கௌரவிக்கும் வகையில் ரூபாய் 50,000 ரொக்கம் வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

 இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சமரன் சர்வேஷ் பேசுகையில்: யாரும் முயற்சி செய்யாத சாதனையை நான் சிறுவயதில் முயற்சி செய்து சாதனை படைத்துள்ளேன் என்றும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கம் வாங்குவதே எனது லட்சியம் என பேட்டியளித்தார்.

ALSO READ:

9 year old archer Smaran creates national record at Sathyabama Institute of Science and Technology

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *