இந்தியாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த SIP அகாடமி

இந்தியாவில் 7.6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்தியுள்ள SIP அகாடமி இந்தியா, இந்தியாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடுகிறது

6 ஆகஸ்ட் 2018: இந்தியாவைச் சேர்ந்த 7.6 லட்சத்திற்கும் (0.76 மில்லியன்!) மேற்பட்ட குழந்தைகள், SIP அகாடமி இந்தியாவின் பல்வேறு பாடதிட்டங்களின் வழியாக தங்களது மனரீதியிலான திறன்கள் மேம்படுத்தப்பட்ட பலன் பெற்றுள்ளனர். தனது 15வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் SIP அகாடமி இந்தியா,படைப்பாற்றல் மிக்க சந்தனை மற்றும் மேம்படுத்தப்பட்ட தன்னம்பிக்கைக்கு கூடுதலாக, கல்வி செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதற்கான தாங்கள் பெற்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், SIP அகாடமி இந்தியா ஒரு செயல்விளக்க நிகழ்வினை நடத்தியுளள்து, மேலும் இந்த நேர்வினை பயன்படுத்தி, கல்விசார்ந்து மற்றும் ஃ அல்லது வாழ்க்கைத் தொழில் சார்ந்து பெறும் வெற்றிகளை சாதித்துள்ள தங்களது பல்வேறு முன்னாள் மாணவர்களையும் SIP அகாடமி இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இந்நேர்வினை முன்னிட்டு ஒரு சிறப்பு நினைவுச்சின்னம் வெளியிடப்பட்டது மற்றும் பல்வேறு தேசிய அளவிலான முன்முயற்சிகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டன.
இந்நேர்வின் போது பேசிய, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.தினேஷ் விக்டர் அவர்கள், தங்களது மாணவர்களின் வெற்றிகளைக் காண்பது மிகுந்த திருப்தியையும் மற்றும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்தார். அவர்,“குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி மற்றும் படைப்பாற்ற சிந்தனை கருத்தாக்கத்தில் நாங்கள் முன்னோடிகளாவோம் மற்றும் இப்பயணம் பல்வேறு சவால்களைக் கொண்டிருந்த போதும், அதன் முடிவு அற்புதமானதாகத் திகழ்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சிறந்த புத்திகூர்மைக்கான சாத்தியத்திறனைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மூளையின் திறன்களானது எப்போது எல்லைகளற்றதாகும். எனினும், ஒரு முறையான பயிற்சி அமைப்பு இன்றி, குழந்தைகளால் அத்தகைய சாத்தியத்திறனை எட்ட முடியாது. ளுஐP அகாடமி இந்தியாவின் உலகத்தரத்திலான பயிற்சிகள், குழந்தைகளால் சாதாரணமாக சாதிக்க முடியாத அளவிற்கு குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ள உதவியுள்ளது” என்று கூறினார்.
“கல்விசார் வெற்றிகளைப் பெறும் அதே நேரத்தில், குழந்தைகளுக்கு அதிக தன்னம்பிக்கையும் இதன் வழியாக கிடைக்கப்பெறுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, யுகே, யுஎஸ்ஏ, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்ப+ர் போன்ற பல்வேறு முன்னேறிய நாடுகளிலும் உள்ள எங்களது பல்வேறு முன்னாள் மாணவர்கள் பெற்றுள்ள அபரிமிதமான வெற்றிகளைக் காண்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் மேலும் கூறினார்.
SIP அகாடமி இந்தியாவின் வெற்றிக்கான தனது வாழ்த்துச் செய்தியில், SIP அகாடமி மலேசியாவின் நிறுவனர் திரு.கெல்வின் தாம் அவர்கள், இந்திய செயல்பாடுளில் கிடைக்கப்பெற்றுள்ள பெரும் வெற்றியானது,ளுஐP அகாடமி இந்தியா ஒட்டுமொத்த உலகளாவிய செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்கச் செய்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். “பல்வேறு ஃபிரான்சைஸி தேசங்களுடன் ஒப்பிடுகையில், SIP அகாடமி இந்தியா ஒரு அபரிமிதமான மற்றும் ஈடுஇணையற்ற வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன் விளைவாக, ஒட்டுமொத்த உலகளாவிய செயல்பாடுகளையும் கைபற்றியுள்ளது மற்றும் பிற தேசங்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்னுதாரண வடிவாக்கமாக உருவாகியுள்ளது” என்று கூறினார்.
2003 – ம் ஆண்டு, ஒரு திட்டம் மற்றும் 3 பணியாளர்கள் மற்றும் தமிழகத்தில் ஒரு சில ஃபிரான்சைஸிகளுடன் துவக்கப்பட்ட SIP அகாடமி இந்தியா, தற்போது 5 பயிற்சிதிட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் 23 – க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 300 – க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது மற்றும் இந்தியாவிலுள்ள 300 – க்கும் மேற்பட்ட பள்ளிகளுடனான கூட்டாண்மையில் 800 – க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயலாற்றி வருகிறது. 2016 – ம் ஆண்டு, SIP அகாடமி இந்தியா, உலகளாவிய மாஸ்டர் ஃபிரான்சைஸர் செயல்பாடுகளை கைபற்றியதைத் தொடர்ந்து, தற்போது உலகம் முழுவதும் 8 – க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
SIP அகாடமி இந்தியாவின் 15வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திட்டமிடப்படப்பட்டுள்ள பிற தேசிய அளவிலான செயல்பாடுகள்
தனது 15வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, SIP அகாடமி இந்தியா கீழ்காணும் முன்முயற்சிகளை திட்டமிட்டுள்ளது:
எதிர்காலத்தை காக்கும் வகையில் மரக்கன்றுகளை ளுஐP குழந்தைகள் நடவுள்ளனர்
15 நகரங்களில்,ளுஐP அகாடமி இந்தியா ஃபிரான்சைஸிக், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அரசு முன்முயற்சியுடன் ஒருங்கிணைந்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் வகையில் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை நடவுள்ளனர். இந்த மரக்கன்றுகள் உள்ளுர் முனிசிபாலிட்டியிடமிருந்து பெறப்படும் மற்றும் அரசால் அடையாளம் காணப்படும் இடங்களில் நடப்படும். இந்நிகழ்வு 4 ஆகஸ்ட் 2018 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கொச்சின், ஹைதராபாத், பெங்களுரூ, பூனா, அவுரங்காபாத், ஜல்கோன், நாக்பூர், நான்தெட், புதுடெல்லி, கொல்கத்தா, பாட்னா, ரான்சி, ஜம்ஷெத்பூர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில் 8500 – க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இந்நிகழ்வில் நடப்பட்டன மற்றும் இந்த தேசிய அளவிலான முன்முயற்சியில் 1000 – ற்கும் மேற்பட்ட SIP உறுப்பினர்கள் பங்கேற்றனர்
விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 2800 ளுஐP குழந்தைகள் பங்கேற்றும் பேரணி
5 ஆகஸ்ட் அன்று, ஆண்டு முழுவதும் மரங்களை நட இந்திய குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், 2800 – க்கும் மேற்பட்ட SIP அகாடமி இந்தியா குழந்தைகள் பங்கேற்ற பேரணி 15 நகரங்களில் நடைபெற்றது. மா, வேம்பு மற்றும் நெல்லி ஆகிய 3 வகை மரங்களை நடுவதற்கு வலியுறத்தப்படுகிறது.
வேம்பு நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது, வெள்ளங்களை கட்டுப்படுத்துகிறது, மண் அரிப்பை குறைக்கிறது மற்றும் நிலத்தடி நீரில் உப்புசேர்வதை குறைக்கிறது. ஒரு வெப்பமண்டல மரமாகத் திகழும் நெல்லி மிகச்சிறந்த மருத்துவ தன்மைகளைக் கொண்டுள்ளது. மாமரங்கள் நீரை வடிகட்டவும்,நிலத்தடி நீரில் உப்புசேர்வதை குறைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மற்றும் நீர்நிலைகளில் நீரின் போக்கினை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இவை, மனிதர்களுக்கு மட்டுமின்றி, பிற உயிரனங்களுக்கும் உணவு மற்றும் இருப்பிடத்தை அளிக்கின்றன.
விழிப்பணர்வு உருவாக்கும் பேரணிகள் கீழ்காணும் முக்கிய அமைவிடங்களிலும் குழந்தைகளால் நடத்தப்பட்டன:
டெல்லி – இந்தியாகேட் – ராஜ்பாத்
கொல்கத்தா – விக்டோரியா மெமோரியல் ஹால்
ஹைதராபாத் – நெக்லஸ் சாலை
பெங்களுரூ – கப்பன் பூங்கா
சென்னை – பெசண்ட் நகர் கடற்கரை

தனது 15 ஆண்டுகளால பயனத்தில்,ளுஐP அகாடமி இந்தியா, பல்வேறு “முதல் முறை” சாதனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது:
1. இதுபோன்ற வகைகளில், இந்தியாவில் 7.6 லட்சம் குழந்தைகளின் மனரீதியிலான மேம்பாட்டினை சாதித்துள்ள ஒரே நிறுவனமாக இது திகழ்கிறது.
2. திறன்மேம்பாட்டில் மற்றும் வளர்ச்சியில் ஒரு குறைந்தபட்ச அளவிலான வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் நாட்டின் ஒரே நிறுவனமாகவும் மற்றும் அதை சாதிக்க முடியாத பட்சத்தில் “மணி-பேக்” உத்தரவாதத்தை வழங்கும் நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
3. இத்தகையதொரு தேசிய அளவில், குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தும் பயிற்சி திட்டங்களை நடத்தும் இந்தியாவின் முதன் நிறுவனம் SIP அகாடமி இந்தியா ஆகும்.
4. அனைத்து ஃபிரான்சைஸிகளையும் இணைக்கும் வகையில், 250 – க்கும் மேற்பட்ட நகரங்களின் ஆன்லைன் அமைப்பினைக் கொண்டுள்ளது நாட்டின் முதல் குழந்தைகள் திறன் மேம்பாட்டு நிறுவனமாகவும் இது திகழ்கிறது.
5. தாய்நிறுவனத்தின் சர்வதே செயல்பாடுகளை கைபற்றிய ஒரே அபாகஸ் நிறுவனமாக இது திகழ்கிறது.
6. பள்ளிகளுக்கு படிப்பு மேம்பாட்டிற்கான உத்தரவாதத்தை வழங்கும் முதல் நிறுவனமாக இது திகழ்கிறது.
7. கூடுதலாக, SIP அகாடமி இந்தியா, நூற்றுக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது மற்றும் அதில் 80மூ – க்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.

ALSO READ:

SIP Academy India Celebrates 15 Years in India

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *