சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27– ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27– ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

சென்னை ராஜிவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சதியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27 – ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைதலைவர் பூனியா, வின்ஞானி மற்றும் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி.இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுந்தர் மனோகரன், இணை வேந்தர் சசி பிரபா, பதிவாளர் S.S. ராவ், ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி, நிர்வாக இயக்குனர் லோக சண்முகம், மாணவ மாணவிகளின் டீன் சுந்தரி உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்த சுமார் 3000 மாணவ-மாணவியர்கள் 2017-18 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றனர். இதில் பொறியியல், கட்டிடக்கலை, பல் மருத்துவம், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் சார்ந்த , இளநிலை, முதுநிலை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் 1389 பேர் வேலையுடன் பட்டப்படிப்பு சான்றிதழும் பெற்றதன் மூலம் 70 விழுக்காடு மாணவ-மாணவியர்கள் வெற்றிகரமான எதிர்கால பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது சத்தியபாமா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் பெருமையாகும்.

டாக்டர் ஜேப்பியார் ரெமிபாய் மெரிட் ஸ்காலர்ஷிப் சார்பில் ஆண்டு தோறும் 50 லட்சம் தகுதியுள்ள நன்கு படிக்கும் மாணவ- மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய சாதனை புரிந்த 64 மாணவ மாணவியர்களை சிறப்பு விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சத்யபாமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள் சாதனை மாணவ-மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைதலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ALSO READ:

SATHYABAMA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY 27th CONVOCATION

 

Please follow and like us: