இணையவழி (Online) மூலம் பத்திரிப்பதிவு செய்யும் திட்டம்

இணையவழி (Online) மூலம் பத்திரிப்பதிவு செய்யும் திட்டம்

தென்சென்னை பதிவு மாவட்டம், தியாகராயநகரில்இணைய வழி (Online) (TeAM STAR 2.0) மூலம்பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவுத்துறை பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்களுக்கு பயிற்சி தியாகராயநகர், செப்டம்பர்4, வழங்கப்பட்டது.
பத்திரப்பதிவு துறையில்விரைவான சேவை மற்றும்வெளிப்படையான தன்மையை உறுதி செய்யும்விதமாக இணைய வழி (Online) (TeAM STAR 2.0) மூலம்பதிவு செய்யும்முறை நடைமுறைப்படுத்துப்பட்டு வருகிறது .இம்முறை படிப்படையாக அனைத்து சார்பதிவகங்களுக்கும்நடை முறைப்படுத்தப்படுவதை முன்னிட்டு பதிவுத்துறைத்தலைவர்அவர்களின்ஆணைப்படி, தென்சென்னை பதிவுமாவட்ட உதவிப்பதிவுத்துறைத்தலைவர்திருமதி.பூ.வ.கீதா அவர்களால், தென்சென்னை பதிவுமாவட்டபணியாளர்கள், ஆவண எழுத்தர்கள்மற்றும்பொதுமக்களுக்கு பல்வேறுபயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகின்றன. இதனைதொடர்ந்து ஐந்தாவது முறையாக இணையவழி (Online – TeAM STAR 2.0) மூலம்பதிவு செய்தல்தொடர்பான செயல்முறை பயிற்சி ஒவ்வொருவருக்கும்தனித்தனியாக கணினிவழியில்சென்னை வருவாய்மாவட்ட சார்பதிவகபணியாளர்கள், ஆவண எழுத்தர்கள்மற்றும்பொதுமக்களுக்கு 04.09.2017 அன்று அளிக்கப்பட்டது.
சென்னை, தியாகராயநகர், ஸ்ரீநாராயணமிஷன்சீனியர்செகண்ட்ரி பள்ளியில் T.C.S பணியாளர்செல்வி.அக்ஷயா அவர்களால்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில்கூடுதல்பதிவுத்துறைத்தலைவர்திருமதி.அங்கையர்கன்னிஅவர்கள்கலந்துக்கொண்டு இணையவழி (Online) (TeAM STAR 2.0) மூலம்ஆவணம்பதிவு செய்தல்தொடர்பான வழிமுறையினை எளிமையாக எடுத்துரைத்தார். பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள்மற்றும்பொதுமக்களின்சந்தேகங்களுக்கு சென்னைசரக உதவிப்பதிவுத்துறை தலைவர்கள்திருமதி.வடிவழகி அவர்கள்தெளிவுரை வழங்கினார். இப்பயிற்சியில்தென்சென்னை பதிவுமாவட்ட உதவிப்பதிவுத்துறைத்தலைவர்திருமதி. பூ.வ.கீதா அவர்கள்,  மாவட்டப்பதிவாளர் (தணிக்கை) திரு.இரா.மனோகரன்அவர்கள், சார்பதிவாளர்கள், பதிவுத்துறைபணியாளர்கள், ஆவணஎழுத்தர்கள், வழக்கறிஞர்கள்மற்றும்பொதுமக்கள்எனசுமார் 200 நபர்கள்கலந்துக்கொண்டு பயிற்சிபெற்றனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *