இனி அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!

வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல்கள் மின்னணு நடவடிக்கை மூலம் ஆய்வு!

அடிக்கடி வருமானவரி அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது!!

சென்னை அக்டோபர் 5, 2017, வருமானவரி செலுத்துபவர்கள் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்த வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமானவரி செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் தாக்கல் செய்யும் கணக்குகளில் குறிப்பிட்ட கணக்குகள் வரையறுக்கப்பட்ட மறுஆய்வு செய்யப்படுகின்றன.

இந்தகணக்குகளின் மறுஆய்வின் போது வரி செலுத்துவோரிடம் விளக்கம் கேட்கப்படும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி வந்துசெல்ல வேண்டிய அவசியம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன.

இவற்றை தவிர்க்கும் வகையிலும் கணக்கு தாக்கல் செய்பவர்கள் சிரமத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் மின்னணு நடவடிக்கை என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

2017-18 நிதி ஆண்டில்31 டிசம்பர், 2017 அன்று காலாவதி ஆகிற ஆய்வுக்கு உட்பட்ட வரி மதிப்பீடுகளை இந்த மின் ஆளுகைத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது.

2017 ஆம்ஆண்டு அக்டோபர் முதல் தேதி வரை முடிக்கப்படாது நிலுவையில் உள்ள, காலாவதியாகிற வரிமதிப்பீட்டிற்கு உட்பட்ட கோப்புகள் மீதான மதிப்பீடு நடவடிக்கைகள் மின்னணு-நடவடிக்கை (e-Proceeding) மூலமே நிறைவு செய்யப்படும்.

ஏற்கனவே இ-மெயில் அடிப்படையில் தகவல் தொடர்பில் உள்ள, சென்னையைச் சேர்ந்த, காலாவதியாகிற மதிப்பீடுகள், ‘மின்னணு-நடவடிக்கை’ வசதிக்கு மாற்றல் ஆகும். இது தொடர்பாக வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறையின் சார்பில் தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும்.

மேலேகுறிப்பிட்டுள்ள கோப்புகள் நீங்கலாக, வருமான வரி முதன்மை ஆணையரின் தலைமை அலுவலகம் இயங்கும் பகுதியில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ள ‘வரையறைக்கு உட்பட்ட மீளாய்வு’ கோப்புகள் தொடர்பாக (மின்னணு மூலம் தாக்கல் செய்யும் கணக்கு வைத்துள்ள) வரி செலுத்துவோர் தங்களது விருப்பத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். 15 அக்டோபர் 2017க்குள் ITBAவின் மின்னணு-நடவடிக்கை வசதிக்குத் தங்களின் சம்மதத்தை தெரிவிக்கலாம்.

மதிப்பீட்டு அதிகாரிகளிடமிருந்து வரி செலுத்துவோருக்கு வெவ்வேறு வகையான எண்ணற்ற தகவல் தொடர்புக்கு,மின்னணு-நடவடிக்கை ஏதுவாக இருக்கும். துறையிலிருந்து தகவல் பெற்றால், வரி செலுத்துவோர் மின்னணு மூலம் தாக்கல் செய்யும் தளம் (e-filing portal) மூலம் பதில், அதனோடு இணைப்புகளை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க முடியும். வரி செலுத்துவோருக்கான இந்த இணக்கமான நடவடிக்கை காரணமாக, வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதை இது உறுதி செய்யும். இது வரி செலுத்துவோரின் பொறுப்புச்சுமையை வெகுவாகக் குறைக்கும். இந்த வசதி, மதிப்பீட்டு நடவடிக்கைகளின் போது, வரித்துறை எழுப்பும் வினாக்களுக்கு 24 x 7எந்நேரமும் / எப்பொழுதும் பதில்களை சமர்ப்பிக்க வழி அமைத்து தருகிறது. தாள்கள் இல்லாத மதிப்பீட்டு நடவடிக்கை என்பதனால் இது சுற்று சூழலுக்கு இணக்கமான முன்னேற்பாடாக அமையும். வருமான வரித்துறையின் மின்னணு மூலம் தாக்கல் செய்யும் இணைய தளத்தில் இதுவரை கணக்கு வைத்துக் கொள்ளாத வரி செலுத்துவோர், மின்னணு மூலம் தாக்கல் செய்யும் இணைய தளமான www.incometaxindiaefiling.gov.in இல் உள்ள எளிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மின்னணு வழியே மதிப்பீடு செய்யும் புதிய முன்னேற்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல் 29.09.2017 தேதியிட்ட மத்திய நேரடி வரி வாரியத்தின் ஆணை எண்.8/2017இல் கிடைக்கும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *