நிலைக்கத்தக்க எதிர்காலத்திற்கு மஹா HD+ சிமெண்ட்! மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ்-ன் புதிய அறிமுகம்!

நிலைக்கத்தக்க எதிர்காலத்திற்கு மஹா HD+ சிமெண்ட்!
மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ்-ன் புதிய அறிமுகம்!

சென்னை, ஜுன் 12, 2018 : 40 பில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான மை ஹோம் குழுமத்தின் முத்திரைபதித்த ஒரு தொழில் பிரிவான மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மஹா HD+ சிமெண்ட்டின் கீழ் தங்களுடைய புராடக்ட் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் மேலாண்மை இயக்குநர் திரு. ரஞ்சித் ராவ் ஜுபாலி அவர்கள் அந்நிறுவனத்தின் தலைமைக் குழுவுடன் சேர்ந்து, இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புதிய சிமெண்ட் புராடக்ட்டை அறிமுகப்படுத்தினார்.

மக்னீசியா, சல்ஃபர், காரங்கள் மற்றும் குளோரைடு போன்ற மிகவும் கெடுதல் குறைந்த சேர்க்கைப் பொருட்களுடன் உயர்தரம் வாய்ந்த எரிசாம்பலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் மஹா HD+ சிமெண்ட் மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் உற்பத்திக் குழுவிடமிருந்து வெளிவந்திருக்கும் ஒரு திருப்புமுனை புத்தாக்க புராடக்ட் படைப்பாகும். இது, கட்டுமானத் தொழிலில் நீடித்து நிலைத்த கட்டுமானத்திற்கு ஒரு மார்க்கத்தை உருவாக்குவதில் இந்நிறுவனத்தின் தளராத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் கால்சியம் சிலிகேட்களின் மிகவும் எதிர்வினையாற்றக்கூடிய நிலைகள் உள்ளன. இவை காலப்போக்கில் கட்டமைப்பின் வலிமையை மேம்படுத்துவதுடன், கட்டமைப்பிற்கு வெல்லமுடியாத ஆயுளை கொடுக்கிறது. இது பிரத்யேக கனிம கலவைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், மற்ற வழக்கமான சிமெண்டுடன் ஒப்பிடும்போது, இதில் உயர்ந்த தொழில்நுட்ப பண்புகள் உள்ளன.

“நாங்கள் எதிர்காலத்தில் இன்னும் பல புத்தாக்க பொருட்களை கொண்டுவருவதற்கு உறுதிபூண்டிருக்கிறோம். இந்த சந்தை மாறிவருவதுடன் இந்தியாவில் கட்டுமானத் தொழிலை ஆதரிப்பதற்கு இன்னும் தரமான புராடக்ட்களுக்கான சேவையும் பெருகிவருகிறது. எனவே, புதிய மஹா HD+ தகுந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் மற்றும் இது கட்டுமான நிலவமைப்பிற்கும் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் அனுகூலமான விளைபயன்களை கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ரஞ்சித் ராவ் ஜுபாலி கூறினார்.

இந்தப் புதிய சிமெண்ட், கான்கிரீட்டின் பண்புகளை மேம்படுத்துகிறது; இதன் செயல்படுதன்மை மற்றும் இணக்கத்தன்மையை மேம்படுத்துகிறது, வெப்ப நீராவி தன்மையை குறைக்கிறது. இதனால் மேற்பரப்பில் விரிசல்கள் குறைக்கப்படுகிறது, பிற்கால வலிமை அதிகரிக்கச் செய்யப்படுகிறது, அரிப்பு மற்றும் சல்பேட் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கச் செய்யப்படுகிறது மற்றும் காரம் உள்ளளவு குறைக்கப்படுகிறது. இந்தப் பண்புகள் உட்பொதிக்கப்பட்ட எஃகுக்கு பெரும் பாதுகாப்பு கொடுப்பதுடன் கடலோர கட்டுமானங்களுக்கு சிறந்தவையாகும். குறைந்த கார உள்ளடக்கம் கார – கலவைப்பொருள் எதிர்வினை ஆபத்தை நீக்குவதுடன் சிமெண்டுடன் கான்கிரீட் கலவையின் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கச் செய்கிறது.

புதிய சிமெண்ட் அறிமுகம் குறித்து மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவரான திரு. விஜய் வர்தன் ராவ் பேசுகையில், “மஹா HD+ சிமெண்ட் என்பது மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் ஒரு புதிய புத்தாக்கமாகும். ஏனெனில் இது நல்ல நீண்ட ஆயுள் தருகிறது, நீண்டகால வலிமை தருகிறது மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் கட்டுமானங்களுக்கு உயர் எதிர்ப்புதன்மை தருகிறது. இந்த சிறந்த பண்புகள், அனைத்து வகையான குடியிருப்பு கட்டுமானங்களிலிருந்து பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் விரையிலான மற்றும் கடல்நீர் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் செயல்திட்டங்கள் வரையிலான கட்டுமானங்களுக்கு மிகவும் முன்னுரிமையளித்து விரும்பப்படும் சிமெண்ட்டாக ஆக்கியிருக்கிறது. இது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் கடல் பயன்பாடுகள் போன்ற மோசமான சுற்றுச்சூழல்களுக்கு கான்கிரீட் வெளிப்படுபவற்றிற்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாகும்,” என்று கூறினார்.

மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் பி. லிட்.. குறித்து (MHIPL):
இந்நிறுவனம் தெலங்கானாவில் நல்கோண்டா மாவட்டத்தில் மெல்லச்செருவு என்ற இடத்தில் அதன் முதல் சிமெண்ட் ஆலையை நிறுவியது. அந்த ஆலையின் தற்போதைய வருடாந்திர உற்பத்தி அளவானது 3.2 பில்லியன் டன்களாகும். 2009ம் ஆண்டில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் முல்காலப்பள்ளியில் சிமெண்ட் அரவை தொழிலகத்தை 2 மில்லியன் டன்கள் என்ற வருடாந்திர உற்பத்தி திறனோடு இந்நிறுவனம் நிறுவியது. 2013ம் ஆண்டில் MHIPL-க்கு 100% முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாக ஸ்ரீ ஜெய ஜோதி சிமெண்ட்ஸ் இணைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இந்நிறுவனத்தில் நான்காவது சிமெண்ட் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ்-ன் நிறுவப்பட்ட உற்பத்தி அளவானது ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களாக அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக இந்நிறுவனம் வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆறு நிலைகள் கொண்ட இன்லைன் கால்சினர் ப்ரீ-ஹீட்டர் தொழில்நுட்பத்தினைக் கொண்டு அமைக்கப்பட்ட மிக நவீன சிமெண்ட் தயாரிப்பு ஆலையாக இது திகழ்கிறது. ஜெர்மனியின் லோஷி நிறுவனத்திற்கு சொந்தமான மிக நவீன தனிப்பட்ட அரவை மற்றும் கலவை தொழில்நுட்பம் எமது சிமெண்ட் தயாரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. வரும் எதிர்காலத்திலும் அதிவிரைவாக தனது உற்பத்தி அளவை விரிவாக்கம் செய்யவும் இந்நிறுவனம் மிகப்பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறது.

அயர்லாந்து நாட்டின் CRH plc நிறுவனத்துடன் 50:50 பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கூட்டு வகிப்பு நிறுவனமான மை ஹோம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், தரம், நம்பகத்தன்மை மற்றும் சிக்கனமான மின் பயன்பாடு ஆகிய அம்சங்களுக்காக கவுரவமிக்க தேசிய விருதுகள் பலவற்றை வென்றிருப்பதன் மூலம் மிக வலுவான நற்பெயரை உருவாக்கியிருக்கிறது. CRH plc என்பது 31 நாடுகளில் செயல் இருப்பைக் கொண்டு உலகளவில் இயங்கிவரும் ஒரு சர்வதேச புகழ்பெற்ற தொழில் குடும்பமாகும். 2016ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 27.56 பில்லியன் யுரோவாக இருந்தது. உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக CRH திகழ்கிறது.

குறித்த சில தகவல்கள்
மொத்த உற்பத்தியளவு: ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் டன்கள்
உற்பத்தி ஆலைளக்: தூத்துக்குடி (தமிழ்நாடு), நல்கொண்டா (தெலங்கானா), கர்னூல் மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரா)
தயாரிப்புகள் விற்பனைசெய்யப்படும் சந்தைகள்: தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா. ஏற்றுமதி நாடுகள்: ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்.

ALSO READ:

My Home Launches High Durable and Designable MAHA HD+ Cement For Sustainable Construction

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *