சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா!

சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா !

அகில உலக அரிமா சங்கத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் , காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்…. உள்ளிட்டோருடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா !

அரிமா சங்கம் எனப்படும் “லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்”, மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . இதையொட்டி அரிமா மாவட்டம் 324 ஏ1 சார்பில் சென்னை, கிண்டி “லீ ராயல் மெரிடியன்” நட்சத்திர ஹோட்டலில்., அரிமா மாவட்ட ஆளுனர் லயன் டாக்டர் பாபாயி அம்மா தலைமையில் சிறப்பாக பெரிய விழா ஒன்று நடந்தேறியுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அகில உலக அரிமா சங்கத் தலைவர் லயன் . நரேஷ் அகர்வால் மற்றும் , முன்னாள் மத்திய சுகாதாத்துறை அமைச்சர் டாக்டர் .அன்புமணி ராமதாஸ் , அவரது துணைவியார் சவுமியா அன்புமணி , சர்வதேச அரிமா இயக்குனர்கள், ஆளுனர்கள் , துணை ஆளுனர்கள் , முன்னாள் இயக்குனர்கள் , ஆளுனர்கள் … முறையே லயன் ஐ.டி.தனபாலன் , லயன்.கே.தனபால் , லயன் . பிரகாஷ்குமார் ,லயன் .ஜி.எம்.ராஜரத்தினம் , லயன் . ஆர்.பி.சத்யநாராயணா , லயன். ஆர்.பிரதிபாராஜ் , லயன். குமார் , லயன். என்.எஸ்.சங்கர் , லயன். ஜி.ராமசாமி , லயன். குலாம் உசேன் , லயன். கே.ஜெனநாதன் உள்ளிட்டோருடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் லயன். டி.ஆர்.பாலேஷ்வரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாவட்ட அளவில் பள்ளி , கல்லூரிகளில் நன்றாக படிக்கும் 50 மாணவ மாணவிகளுக்கு ., மொத்தத்தில் , மூன்று லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதோடு இவ்விழாவையொட்டி ., அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ., தன் கணவர் முன்னாள் மத்திய சுகாதாத்துறை அமைச்சர் டாக்டர். அன்புமணி ராமதாஸுடனும், தந்தையார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியுடனும் இவ்விழாவில் கலந்து கொண்ட “பசுமை தாயகம்” இயக்குனர் சவுமியா அன்புமணிக்கு அவரது சேவையை பாராட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த “வுமன் அச்சீவர் ” அவார்டும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இறுதியாக .,மேடையில் டாக்டர் அன்புமணி ராமதாஸை வைத்துக் கொண்டே, லயன்ஸ் கிளப் நிர்வாகி ஒருவர் ., பாராளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல், மோதல்களை விட ., இங்கு இவ்வளவு ஒற்றுமையாக வீற்று இருக்கும் எங்களது லயன்ஸ் கிளப் தேர்தல்கள் கடுமையாகவும் , கணிக்க முடியாதபடியும் , யார் காலை யார் வாருவார் ? யாருக்கு யார் ஆதரவு தருவார் ..? என்பது தெரியாத, புரியாத புதிராக இருக்கும் … என பேசியது அவ்வளவு பெரிய சபையில் , பெரிய அளவில் ஆமோதிப்பு சிரிப்பலையை ஏற்படுத்தியது ஹாஸ்யம்! சுவாரஸ்யம்!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *