விஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு

விஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லரை’ தமிழில் நடிகை ஸ்ருதிஹாசனும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ஹிந்தியில் அமீர்கானும் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. டிரெய்லர் பிரம்மாண்டமாக உள்ளது என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும்.

ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு படம் குறித்து செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: விஸ்வரூபம் 2 தாமதமானதற்கு ராஜ்கமல் நிறுவனம் காரணமல்ல. முதல் பாகத்தை உருவாக்கியபோது எந்த மாதிரிப் பிரச்னை இருந்ததோ அதேபோல சில பிரச்னைகள் இந்த முறையும் இருந்தன. அதேபோன்று முதல் பாகத்தை படத்தை வெளியிடுவதற்கு முன்னரே திரையிட்டுக் காட்ட வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளானேன். இப்போது அந்த மாதிரியான வற்புறுத்தல்கள் எதுவும் இருக்காது.

ஒருவேளை பட வெளியீட்டில் ஏதாவது பிரச்னை என்றாலும் அதை எதிர்கொள்வேன். படத்தில் நாசர், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுடைய  பங்களிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகுந்த கவனத்தை ஏற்படுத்துவார். முதல் பாகத்தைப் போல இந்த பாகத்திலும் சிறந்த ஆடை வடிமைப்பை கௌதமி கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். நீண்ட காத்திருப்பாக இருந்தாலும் படம் நிறைவைத் தரும் என நம்புகிறேன். இந்தியன் 2, சபாஷ் நாயுடு படங்களைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது” என்றார்
கமல்ஹாசன்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *