இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

பல்லாவரம், வேஸ்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின், 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதன் வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் , சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ”தமிழகத்தில், உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கை, 46 சதவீதமாக உள்ளது. ”உயர்கல்வியில், நாட்டிற்கே, தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. தமிழ், இனிமையான மொழி. நான் தமிழை விரும்புகிறேன்,” என்றார்.

இந்திய விண்வெளி ஆணையம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சிவன், ‘பாரதிய நபிக்கிய வித்யுட் நைகாம்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கல்லோல் ராய் ஆகியோருக்கு, தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த, 83 மாணவர்களுக்கும், தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2,217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட,  மாணவர்கள் பெற்றோர் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *