சுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் SRM இன் தொடர் முயற்சிகள்

சிறு துளி பெரு வெள்ளம். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான மையக் கரு – ஜூன் 5 “நெகிழி மாசு ஒழிப்பு”. வரும் ஆண்டுகளில் மீன்களை விட கடலில் அதிக நெகிழி இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலை தவர்பதே நம்முடைய கடமையாகும். செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் யதார்த்தம் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி மனிதன் முன்னேற்றமடைந்துள்ளான். அது நாகரீகத்தின் நியாயமான பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தியின் வெளிப்புற பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை உணர தவறிவிட்டோம்.

நிலபரப்பு மற்றும் கடல் படுகைகள் மாசுபட தொடங்கிவிட்டன , அதற்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று உணரும் தருனம் இது. 1974 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையானது உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5 ஐ உறுதிப்படுத்தியதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இந்தியா, ஒரு தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான சூழலை நோக்கி செயல்படுவதன் மூலம், ஒரு முன்மாதிரி நாடாக இருப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு.

ஒரு தனியார் நிறுவனமாக SRM பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தும் என்பதற்கு உறுதியளித்துள்ளது. அதையொட்டி ஜூன் 3 ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்ப்பட்டது. இதில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்,பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பிற ஊழியர்கள் என 50பேர் கொண்ட குழு ‘ஒரு மாற்றத்தைத் தொடங்க’ வித்திட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது என்று குழந்தைகள், கடை உரிமையாளர்கள மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. காலப்போக்கில் நீடித்த சிறிய முயற்சிகளால் கணிசமான முடிவுகளை எட்ட முடியும். எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சுற்றுச் சூழலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு SRM தனது பயணத்தைத் தொடங்கியது.

ALSO READ:

SRM’s sustained efforts for the future generations

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *