X வீடியோஸ் சினிமா விமர்சனம்

X வீடியோஸ் சினிமா விமர்சனம்

கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜிதா சஜோ தயாரித்திருக்கும் X வீடியோஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சஜோ சுந்தர்.

இதில் அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அபினவ் மகஜித், அர்ஜூன், மெகர் செஸ்ல்லி அபிஷேக், மகேஷ் மது, அபர்ணா நிஷாத், நீலம் பாண்டே, நீலம் கந்தாரே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஹன், ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ், படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார், கலை இயக்குனர் – கே.கதிர, தயாரிப்பு நிர்வாகி-செந்தில்குமார்.எம், பிஆர்ஓ-ஜான்.

பத்திரிகை நிருபரான அஜ்யராஜ் ஆபாச இணையதளத்தைப் பற்றி கட்டுரை எழுத பல பேரிடம் பேட்டிகள், தகவல்களை சேகரிக்கிறார். அப்பொழுது தன் நண்பன் நிஜய் மூலம் ஆபாச இணையதளத்தில் தன் இன்னொரு நண்பன் பிரசன்னா ஷெட்டியின் மனைவி அக்ரித்தி சிங்கின் ஆபாச வீடியோ இருப்பதை அறிகிறார். இதை உடனே தன் நண்பன் பிரசன்னாவிடம் தெரிவிக்க இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் நண்பன் பிரசன்னா, இது தன்னால் தான் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், இது எப்படி இணையதளத்தில் வந்தது என்று தெரியாது என்றும் கூறி அழுகிறார். அதன் பின் பிரசன்னா அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் அஜ்யராஜ், நிஜய் இருவரும் இன்ஸ்பெக்டர் ஷானுடன் சேர்ந்து ஆபாச இணையதளத்தில் இருக்கும் நண்பன் மனைவியின் வீடியோவை அகற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது இயலாத காரியம் என்றுணர்ந்து இதை பதிவிடும் நபர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள்.

அப்பொழுது தான் இது அந்தரங்க குடும்ப உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் ஹோம்மேட்வீடியோஸ் என்ற இணையதளத்தை நடத்தும் பிரபுஜித் தலைமையுடன் ஐந்து பேர்களின் கூட்டணி மூலம் கோடிக்கணக்கான பணம் புரள்வதை உணர்கிறார்கள். இத்தகைய வீடியோக்களை செல்போன் ரிப்பேர் செய்யும் ஊழியரிடமிருந்தும், சில சபல புத்தி கொண்ட நபர்களிடமும் வெளியே வராத வீடியோக்களை பணம் கொடுத்து வாங்கி இந்த இணையதளத்தில் பணம் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு வருவதை அறிகிறார்கள். இவர்களை பிடிக்க பலவிதங்களில் முயற்சி செய்தாலும் தகுந்த ஆதாரம் இல்லாமல் ஐவரும் தப்பித்து விடுகிறார்கள். அதனால் இவர்களை பிடிக்க நண்பனின் மனைவி அக்ரித்தி உதவி செய்கிறார். இவர் மூலம் இந்த ஆபாச இணையதள நபர்களை பிடித்தார்களா? தகுந்த தண்டனை வாங்கி கொடுத்தார்களா? என்பதே மீதிக்கதை.

அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அபினவ் மகஜித், அர்ஜூன், மெகர் செஸ்ல்லி அபிஷேக், மகேஷ் மது, அபர்ணா நிஷாத், நீலம் பாண்டே, நீலம் கந்தாரே ஆகியோரில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எல்லாம் இந்தி நடிகர்கள் போல் தெரிந்தாலும் படத்தில் நேர்த்தியான மாறுபட்ட நடிப்பை கொடுத்து பல காட்சிகளில் துணிந்து நடித்து இருப்பது பாராட்டுக்குரியது.
இசை – ஜோஹன், ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ், படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார் ஆகிய மூவரின் கூட்டணியில் அனைத்தும் கச்சிதம் குறை சொல்வதற்கில்லை படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்புற செய்திருக்கின்றனர்.

எழுத்து, இயக்கம்- சஜோ சுந்தர். ஆபாச இணையதளங்கள் எண்ணிலடங்காமல் வந்து விட்ட இந்த சூழ்நிலையில் இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் கூட்டமும் பெருகி விட புதுப்புது யுக்திகளை கையாண்டு விதவிதமான ஆபாத வீடியோக்களை பணத்துக்காக பதிவிடும் சைபர் கொள்ளையர்களை பற்றி துணிச்சலாக களமிறங்கி இதன் பின்னணியை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து சில சம்பவங்களை காட்சிப்படுத்தி, பெண்கள் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஆசை வார்த்தைகளாலும், பொய் பித்தலாட்டங்களாலும் சுலபமாக ஏமாந்து தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களால் குடும்பத்தில் மனஉளைச்சல்கள், மிரட்டல்கள், அவமானங்களை தாங்க முடியாமல் உயிரை விடும் அவலங்களை தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் சஜோ சுந்தர். தன் மகள் உள்பட எதிர்கால சந்ததியினர் இந்தப் படத்தை பார்த்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் என்று கூறிய இயக்குனரின் சமூக அக்கறை, எதிர்கால கண்ணோட்டம் பாராட்டுக்குரியது.

இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். பெண்களுக்கே தெரியாமல் எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் தான் பெருமளவில் இணையதளத்தில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி ஒரு சிலரின் பணத்தாசை பலரது குடும்பத்தின் எதிர்காலத்தையே நாசப்படுத்தி கேள்விக்குறியாக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது போன்று சைபர் குற்றவாளிகளின் குடும்பத்தில் ஏற்பட்டால் தான் இந்த வெட்கக்கேடான ஆபாச இணையதளங்களின் எண்ணிக்கை குறையும் என்பதையும் தவறாமல் உணர்த்தியுள்ளார். இதில் பெரும் பங்கு பெண்கள் கையில் தான் உள்ளது என்பதையும் எச்சரிக்கையுடன் இடித்துரைத்திருக்கிறார். வெல்டன்.

மொத்தத்தில் ஆபாசம் இருந்தாலும் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியும், எச்சரிக்கையும், தனிமையில் ஆபத்தையும் உணர்த்துவதோடு பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் X வீடியோஸ்.

Rating: 3.5/5

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *