இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட பேட்கள் மாதவிடாய் சுகாதாரத்தை உறுதி செய்யும்! 

Ms Deepa Santhosh, Devotee, Meera Krishnakutty, Amrita SeRVe (Self Reliant Village) Program, Mata Amritanandamayi Math, Anju Bist, Co-Director, Amrita SeRVe (Self Reliant Village) Program of Mata Amritanandamayi Math

இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள் மட்டுமே நிலைக்கத்தக்க மாதவிடாய் சுகாதாரத்தை உறுதி செய்யும்

இந்தியாவில் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு பெண்ணும் ஒருமுறை மட்டுமே பயன்படுகிற பேடுகளை பயன்படுத்தினால்ஆண்டுதோறும் 5800கோடி (58 பில்லியன்) கறைபடிந்த பேடுகள் கழிவாக சேரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

சென்னை 2018, மே : ஒவ்வொரு மாதமும் மிகவும் பரந்த அளவில் மக்காத கழிவுஒருமுறை பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் துப்புரவு பேடுகளால் உருவாக்கப்படும் நிலையை கவனத்தில் கொள்ளும்போதுஇயற்கைப்பொருட்களால் செய்யப்படுகிற மீண்டும் பயன்படுத்தத்தக்க பேடுகளால் மட்டுமே நிலைக்கத்தக்க மாதவிடாய் சுகாதாரம் சாத்தியமாகும்,” என்று மாதா அமிர்தானந்தமயி மட அம்ரிதா செர்வ் (தற்சார்பு கிராமம்) புரொகிராம்இணை இயக்குநர்  அஞ்சு பிஸ்த் கூறுகிறார். 

துணி மற்றும் வாழைநாரால் தயாரிக்கப்பட்ட துப்புரவு பேடுகளை பயன்படுத்துதல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதலை ஊக்குவிப்பதில் அவருக்குள்ள ஆர்வம் காரணமாக இந்தியாவின் “பேடு பெண்மனி” எனப்படும் அவர்மாதவிடாய் பற்றிய உண்மைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரப்பொருட்களின் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல விளைபயன்கள் குறித்து இளம்பெண்கள் தெரிந்துகொள்ள வைப்பதற்கு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய கருவியாக இருந்துவந்துள்ளார். இவர்ஹைதராபாத்தேசிய ஊரக வளர்ச்சிநிலையத்தால் “மிகவும் புதுமையான பொருள்” என விருது வழங்கப்பட்ட சௌக்கியம் ரீயூசபிள் பேடுகளை உருவாக்கிய இணை படைப்பாளர் ஆவார். இந்த பேட்களில் உறிஞ்சுப்பொருளாக பயன்படுத்தப்படும் வாழைநார்களுக்கான உற்பத்திப்பிரிவுசென்னை அருகே அமைந்துள்ளது. 

அஞ்சு பிஸ்த் மேலும் கூறுகையில், “இந்தியாவில் 355 மில்லியன் மாதவிடாய் பெண்கள் உள்ளனர். ஆனால் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2015-2016) தரவுப்படி 15-25 வயதுப்பிரிவில் உள்ள 57% பெண்களுக்கு மட்டுமே அவர்களுடைய மாதவிடாய்-ஐ எதிர்கொள்வதற்குரிய சுகாதாரப்பொருட்களை பெற்று பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய துப்புரவு பேடுகளை வாங்க வசதியற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு போற்றத்தக்க முயற்சிகளை பல நிறுவன அமைப்புகள் எடுத்துள்ளன. எனினும்இந்தியாவில் இனப்பெருக்க வயதில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய துப்புரவு பேடுகளை பயன்படுத்த வேண்டுமெனில்,ஆண்டுதோறும் 5,800 கோடி (58 பில்லியன்) கறைபடிந்த பேடுகள் சேருமென்று என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கறைபடிந்த பேடுகளை ஒருவர் எப்படி அப்புறப்படுத்துகிறார்?அதை தீ வைத்துக் கொளுத்துவதால் தீங்குவிளைவிக்கக்கூடிய டையாக்சின்கள் மற்றும் ஃபரான்கள் வெளியேறுகின்றன. பேடுகள் மண்ணில் மக்காதவை என்பதால் அவற்றை மண்ணில் புதைப்பதும் நல்லதல்ல. 

Meera Krishnakutty, Amrita SeRVe (Self Reliant Village) Program, Mata Amritanandamayi Math, Anju Bist, Co-Director, Amrita SeRVe (Self Reliant Village) Program of Mata Amritanandamayi Math

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பேடிலும் நான்கு பிளாஸ்டிக் பைகளுக்கு நிகரானவை உள்ளன என்றும் மற்றும் அது சிதைந்துபோவதற்கு 500-800 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் பரம்பரைச் சொத்தாக நாம் விட்டுச்செல்ல வேண்டுமா?” என்று அவர் கேட்கிறார்.   

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய துப்புரவு பேடுகளின் வாய்ப்புத்திறனுள்ள உடல்நல பயன்கள் குறித்து மாதா அம்ரிதானந்தமயி மடத்தைச் சேர்ந்தஅம்ரிதா செர்வ் (தற்சார்பு கிராமம்) திட்டம்மீரா கிருஷ்ண குட்டி அவர்கள் கூறுகையில், “ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பேடுகளில் பெரும்பாலானவற்றில் செலுலோஸ் இழை உறிஞ்சுபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதுவெட்டப்படும் மரத்திலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் செலுலோஸ் இழை தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. இதை தூய வெண்மை நிறமாக்குவதற்கு வெளுக்கச் செய்வதால் இது பேடுகளில் தீங்குவிளைவிக்கும் டையாக்சின்கள் இருப்பதற்கு  வழிவகுக்கிறது. பெண் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கக்கூடிய தோல் மிகவும் ஊடுருவு தன்மையுடையது. எதுவும் தோலுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்குமானால் அது மிகவும் இரத்த ஓட்டப்பெருக்கை விளைவிக்கும். டயாக்சின்கள் நாளமில்லா சுரப்பிகளை குறுக்கீடு செய்யக்கூடியவை மற்றும் மனித இனத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என அறியப்பட்ட பொருட்களில் இதுவும் ஒன்று. பல மருத்துவமனைகளும்மருந்தகங்களும் இப்போது பூமிக்கு மட்டுமல்லாது ஒருவரின் உடலுக்கும் நன்மை பயக்கக்கூடிய,சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் சுகாதாரத்திற்கு வழிவகுக்கிற மீண்டும் பயன்படுத்தக்கூடிய சௌக்கியம் பேடுகளை இருப்பு வைக்கத்  தொடங்கியுள்ளனர்,” என்றார். 

இந்தியாவில் அண்மைக்காலம் வரைஒருமுறை பயன்படுத்தக்கூடிய துப்புரவு பேடுகளை பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வந்தனர். இந்திய துப்புரவு பேடு சந்தை வருடத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகளை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் பொருட்கள் இருப்பது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களிடையே மிகவும் குறைவு. பிஸ்த் கூறுகையில், “சமூக தொழில்முனைவர்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது. அப்போதுதான் துப்புரவு பேடுகளுக்கு நிலவும் பெரிய சந்தையில் கொஞ்சமாவது சுற்றுச்சூழலுக்கு உகந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகள் பிடிக்க முடியும். மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மற்றும் இந்த புராடக்ட்கள் முக்கிய கடைகளில் கிடைக்கச் செய்வதற்கும் அவசியம் உள்ளது. ஊடகங்கள்மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகள் பற்றி விழிப்புணர்வு பரவச்செய்வதற்கு உதவுவதன் மூலம் நாட்டுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் பெரும் சேவையாற்ற முடியும்,” என்றார். 

உலகம் முழுவதுமுள்ள பெரும் வணிகத்தொழில்கள்கழிவே இல்லாத வட்ட பொருளாதார கோட்பாடுகளை பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஒரு பொருளின் பயனுகந்த ஆயுள் சுழற்சி முடிந்த பிறகு என்ன எஞ்சியிருக்கிறதோ அது அடுத்த உற்பத்தி சுழற்சியில் மீண்டும் மூலப்பொருளாகவும் மற்றும் ஆதாரப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பொருட்கள் இந்த புதிய பொருளாதாரத்தில் மிகவும் பிரசித்தி பெறவில்லை. அஞ்சு பிஸ்த் மேலும் கூறுகையில், “இயற்கைப்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகள் என்பது ஒரு தெளிவான யோசனையாகும். இதற்கு இப்போது உகந்த தருணம் வந்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகள் பல நுகர்வோர்களுக்கு பணம் மிச்சப்படுத்துவதற்கு மட்டும் உதவுவதோடு அல்லாமல்பூமிக்கு தங்களால் முடிந்தவற்றை செய்ய விரும்பும் விஷயமறிந்த பெண்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பையும் வழங்குகிறது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேடுகளுக்கு மாறக்கூடிய ஒவ்வொரு பெண்ணாலும், 40,000-60,000 பிளாஸ்டிக் பைகள் சுமை அன்னை பூமிக்கு குறையச் செய்யப்படும்.  இது மட்டுமேமாதவிடாய் சுகாதாரம் கிடைக்கக்கூடிய தாகவும்,  வாங்கக்கூடியதாகவும் செய்வதற்கு ஒரே வழியாகும்,” என்றார்.

ALSO READ:

‘Only reusable pads made of organic materials can ensure sustainable menstrual hygiene’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *