32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்!

32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot–களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கி கௌரவிப்பு!

இன்று (28.05.2018) சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற National Pilot Day Celebration–2018-ல் கலந்து கொண்டு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் 32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு சான்றிதழ் மற்றம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் ;- மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ சேவை வழங்க 108 அவசரகால ஊர்தி சேவையை உறுதிசெய்துள்ளது. உயிர் காக்கும் உன்னத சேவையாம் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு வித்திட்டவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்று புகழாரம் சூட்டினார். ஆரம்ப காலத்தில் 15 ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று 930 ஊர்திகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், First Responder என்று அழைக்கப்படும் 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வனைத்து ஊர்திகளிலும்GPS (Global Positioning Device) பொருத்தப்பட்டு மையக் கட்டுப்பாட்டு அறையுடன்  (Emergency Response Centre)  இணைக்கப்பட்டு, சாலை விபத்து ஏற்படும் பொழுது 13 நிமிடம் 40 நொடிகளில் சென்றடையும் (Response time) வகையில் சிறப்பாக செயல்படுகிறது. இது தேசிய சராசரியான 17 நிமிடத்தை விட மிக குறைவானதாகும். இதேபோன்று சென்னை நகரில் விபத்து நடந்த இடத்திற்கு 8.32 நிமிடத்தில் சென்றடையும் வகையில் உள்ளது. மக்கள் தங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியிலிருந்து 108-ஐ அழைப்பதற்காக “அவசரம் 108” என்ற செயலியை (APP) அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக அழைப்பவரின் இடம் கண்டறியப்பட்டு அதிவிரைவாக ஊர்திகளை அனுப்ப இயலும். தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 70.96 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இவற்றில் 17.90 இலட்சம் கருவுற்ற தாய்மார்களும், 1.50 இலட்சம் குழந்தைகளும்  பயன்பெற்றுள்ளனர்.

இரவு பகல் பாராது, பேரிடர் காலங்களிலும் இந்த அருஞ்சேவை ஆற்றிவரும் PILOT-களை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் PILOT தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக சேவையாற்றிய PILOT-களுக்கு நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும், குரங்கணி தீவிபத்தின் போது சிறப்பாக செயல்பட்ட PILOT-களை பாராட்டி கௌரவித்தார். இந்த பாராட்டு அவர்களை இந்த சேவையை மேன்மேலும் சிறப்புற செய்ய ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை என்று மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திருமதி பி. உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு. குழந்தைசாமி, குடும்ப நலத் துறை இயக்குநர் மரு. பானு, 108 கூடுதல் இயக்குநர் திருமதி ஷோபா மற்றும் GVK EMRI நிறுவனத்தை சார்ந்த உயர் அலுவலர்களும் கலந்து கெண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *