ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

சென்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார்.

இந்தநிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *