ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார்: அண்ணன் சத்யநாராயண ராவ்

ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார்: அண்ணன் சத்யநாராயண ராவ்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய சமுதாய மக்களின் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

ஓசூர் தேன்கனிக் கோட்டை சாலையில், கூட்டு ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். கட்சி தொடங்கியதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது.

மேலும் அவர் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார். தனித்து தான் போட்டியிடுவார். தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணமாக, அவர் அங்கு நேரில் செல்ல முடியவில்லை.

காவிரி விவகாரத்தில், எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்து கொண்டிருக்கிறது. எனவே, பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை, சுமுகமாகவே காவிரி விவகாரம் முடிவடையும்’’. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த் உடனிருந்தார்.

மேலும் இந்த விழாவில், மராட்டிய மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த சத்குரு நாராயண் மகாராஜ் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு ஆசி வழங்கி பேசினார். விழாவில், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், பிரபாகர் ரெட்டி மற்றும் மராட்டிய சமுதாய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *