ஒரு குப்பைக் கதை சினிமா விமர்சனம்

ஒரு குப்பைக் கதை சினிமா விமர்சனம்

(4/5)

பிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் அஸ்லாம் தயாரித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் வந்திருக்கும் ஒரு குப்பைக் ;கதை படத்தை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கியிருக்கிறார்.

நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் ஹீரோயினாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன் யோகி பாபு, ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-மகேஷ்; முத்துசாமி, இசை-ஜோஸ்வா ஸ்ரீதர், பின்னணி இசை-தீபன் சக்கரவர்த்தி, பாடல்கள்-நா.முத்துக்குமார், சுலைமான் பாசில், எடிட்டிங்-கோபி கிருஷ்ணா, கலை-எஸ்.எஸ்.மூர்த்தி, ஸ்டண்ட்-பயர் கார்த்திக், மேளாளர்-ஆறுமுகம், ஸ்ரீதர், ஸ்டில்ஸ்-மோதிலால். உடை-மணி, நடனம்-தினேஷ் மாஸ்டர், ஒப்பனை-குமார், இணை தயாரிப்பாளர்-என்.அரவிந்தன், ராம்தாஸ், பிஆர்ஒ-ஜான்.

குப்பை அள்ளும் தொழிலாளியான தினேஷ் தன் தாயுடன் கூவம் அருகில் குப்பத்தில் வசிக்கிறார். வால்பாறையில் மனிஷாவை பெண் பார்க்க போக, தினேஷ் கிளர்க் வேலை செய்கிறார் என்று நினைத்து மனிஷா திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தினேஷ் தான் செய்யும் வேலை பற்றி மனிpஷாவின் தந்தையிடம் தெரிவிக்க முதலில் தயங்கினாலும் பின்னர் சமாதானம் அடைந்து தன் மகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை தந்தை நடத்தி வைக்கிறார். திருமணம் முடிந்து சென்னைக்கு வரும் மனிஷா தினேஷின் குப்பத்து வீட்டை பார்த்து அதிர்ந்தாலும் பின்னர் அந்த சூழலில் பழகிக் கொள்கிறார். மனிஷாவிற்கு கர்ப்பம் தரிக்க பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லும் போது தன் கணவன் குப்பை அள்ளுவதை பார்த்து அதிர்ந்து கோபத்துடன் பிறந்த வீட்டிற்கு செல்ல தயாராகிறார். அப்பொழுது தந்தையின் அறிவுரையால் வேறு வழியின்றி தினேஷ{டன் வேண்டா வெறுப்புடன் வாழ்கிறார். பிரசவத்திற்காக வால்பாறை செல்லும் மனிஷா குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்து வர மறுக்கிறார். இதனால் தினேஷ் வேறு வழியின்றி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து மனிஷா குழந்தையுடன் தனி குடித்தனம் வருகிறார்.

அதன் பின் எதிர் வீட்டில் குடியிருக்கும் பணக்கார வாலிபனின் அறிமுகம் மனிஷாவிற்கு கிடைக்க முதலில் நட்பாக பழகினாலும், பகட்டைக்காட்டி மனிஷாவை ஆசை வார்த்தை பேசி மயக்கி தன் வசமாக்கி மனிஷா மற்றும் குழந்தையுடன் தலைமறைவாகி விடுகிறார். அந்த சமயத்தில் மனிஷாவிற்காக தான் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறொரு வேலையில் சேர நினைக்கும் தினேஷ் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மனிஷாவும், குழந்தையும் இல்லை என்பதையறிந்து அதிர்ச்சிக் குள்ளாகி குடிக்கு அடிமையாகிறார். இந்த சோகத்தில் தினேஷின் தாயும் இறந்து விட அனாதையாக குடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். அந்த சமயத்தில் மனிஷா இருக்கும் இடத்தை கேள்விப்பட்டு ஒசூருக்கு வருகிறார். அதன் பின் நடந்தது என்ன? மனிஷாவைப் பார்த்தாரா? கொலையை செய்தது யார்? காரணம் என்ன? என்பதே நச்சென்று முடித்திருக்கும் க்ளைமேக்ஸ் காட்சி.

தினேஷ் மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் சோடை போகவில்லை. குப்பை அள்ளும் வேலையை நேசிக்கும் தொழிலாளி, தவறு செய்தாலும் மனைவியை நேசிக்கும் கணவன், கஷ்டப்பட்டு தன்னை ஆளாக்கிய தாயை நேசிக்கும் மகன் என்று வௌ;வேறு கோணங்களில் தன்னுடைய இயல்பான குணம் மாறாமல் அமைதியான பிசிறு தட்டிய வசன உச்சரிப்புடன் தன் கண்களிலேயே உணர்ச்சியை காட்டி அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொண்டு இறுதியில் எடுக்கும் முடிவு எதிர்பாராத திருப்பம் மட்டுமல்ல தவறை திருத்திக் கொள்ள நினைக்கும் நேரத்தில் அதை ஏற்று மன்னிப்பதே சிறந்தது என்பதை உணர்த்திச் செல்கிறார். காதல், நடனம், நட்பு, பாசம், பிரிவு என்று தனக்கே உரித்தான ஸ்டைலில் மிகைப் படுத்தாமல் நடித்திருப்பது அற்புதம்.

மனிஷா யாதவ் முதலில் மலைப்பிரதேசத்தில் இயற்கை சூழலுடன் வாழும் பெண் பின்னர் சென்னையில் கூவம் அருகே குப்பத்தில் வசிக்க நேரிடும் போது அவரின் முகபாவங்களிலேயே அதிருப்தியை காட்டி கஷ்டப்பட்டு வாழ்வதை தன் செயல்கள் மூலம் சொல்லும் விதம் சூப்பர். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். பொய் சொன்ன கணவன் மீது காட்டும் வெறுப்பு, அந்த வெறுப்பு கள்ளக்காதலாக மாறும் போது ஏற்படும் மனமாற்றம், நகர வாழ்க்கை நரக வாழ்க்கையான பிறகு ஏற்படும் மனஉளைச்சல், இயலாமையை வெளிப்படுத்தும் விதம் யதார்த்தம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எளிதில் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நெகடிவ் கேரக்டர், கள்ளக்காதலனுடன் ஒடுவது, திருமணம் செய்யாமலேயே குடித்தனம் நடத்துவது, கள்ளக்காதலன் ஏமாற்றியவுடன் தவிப்பது. இதைப் பயன்படுத்தி நெருங்கும் இளைஞனை பழி வாங்குவது, இறுதியில் தன்னை நேசித்த கணவன் தொழிலே சாலச்சிறந்தது என்று உணர்ந்து திருந்தி செல்லும் வரை உணர்ச்சிபூர்வமாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.

யோகிபாபு தினேஷின் நண்பராக வந்து முதல் பாதி வரை வந்து சிறப்புற செய்திருக்கிறார். ஒரு கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தாயாக ஆதிரா குப்பத்து பாஷையுடன், மகன் மீது பாசத்துடன், மருமகளிடம் காலில் விழுந்து கெஞ்சி சமாதனப்படுத்துவது என்று தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நெகிழ்ச்சி ஏற்படும் வகையில் நடித்து மனதில் நிற்கிறார்.

இவர்களுடன்  ஜார்ஜ்,  கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி- வால்பாறை முதல் கூவம் வரை, சென்னை முதல் ஒசூர் வரை, குப்பை மேடு முதல் மாடி வீடு வரை, சென்னை மாநகராட்சி கிடங்கு, லாரிகள், நகர வாழ்க்கை, குப்பத்து வாழ்ககை என்று அசத்தலான காட்சிக் கோணங்கள் படத்திற்கு வலு சேர்த்து வெற்றிக்கு வழி வகுக்கிறது.

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் அனைத்தும் காதுகளுக்கு இனிமை மட்டுமல்ல மறைந்த நா.முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு இன்னிசை விருந்து கொடுத்திருக்கிறார்.

தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை மெலோடி கலந்து காட்சிகளுக்கு கேற்ப மெல்லிசையில் ஜொலிக்கிறது.

இயக்கம்- காளி ரங்கசாமி. முதல் காட்சியிலேயே நடந்த சம்பவம் என்ன? என்ற ஆர்வத்தை தூண்டி, கொலை செய்து விட்டேன் என்று சரண்டர் ஆகும் போது ஃபிளாஷ்பேக்கில் கதையை சொன்ன விதம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கும் விதம் தான் படத்தின் ஹைலைட். இன்றைய காலகட்டத்தில் சில இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கும், இப்படியும் நடக்குமா? என்பதை ஊடகங்களின் வாயிலாக அறியும் போது தான் நடந்தது உண்மையான சம்பவம் என்பதை அறிவோம்.

சிலரது தவறான செய்கையால் பலரது வாழ்க்கையே தடம் மாறி விடுகிறது. குடும்ப பிரச்னையை தீhக்காமல் போனால் அதை பயன்படுத்தி பிளவு ஏற்படுத்தி குடும்பத்தை பிரிப்பதால் பலவித சிக்கல்களுக்கும், அசம்பாவிதங்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை நகரத்தின் வாழ்வியலையும், சாமான்ய மனிதனின் வாழ்க்கையையும் இணைப்புப் பாலமாக அமைத்து இறுதியில் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை உணர்த்தி சமூக அக்கறையோடு முதல் படத்தை கொடுத்து சிறந்த இயக்குனராக முத்திரை பதித்திருக்கிறார் காளி ரங்கசாமி. படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

இந்த தரமான படத்தை வெளியிட்டிருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தை பாராட்டப்பட வேண்டியது அவசியம்.

மொத்தத்தில் தவறு செய்வது மனித இயல்பு என்றால் அதை மன்னிப்பது மாமனிதனுக்கு அழகு என்பதைச் சொல்வதே ஒரு குப்பைக்கதை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *