மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுகிறது

Photo – Murugavel Janakiraman, Managing Director, matrimony.com

மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை வெளியிடுகிறது

மேட்ரிமோனி.காம் லிமிடெட் தனது முதல் கட்ட பொதுப் பங்கு விற்பனையை சரிஒப்புப் பங்கின் ஒவ்வொன்றின் மதிப்பை ரூபாய் 5 ஆகக்கொண்டு ரூபாய் 983–ரூபாய் 985 வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் செப்டம்ப்ர், 11, 2017 அன்று வெளியிடுகிறது.

  • சில்லரை விற்பனை மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளிலிருந்து ஒவ்வொரு ஒப்புப்பங்குக்கும் ரூபாய் 98 தள்ளுபடி அளிக்கப்படலாம்.
  • இந்தப் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்ட பங்குகளுடன் தற்போது உள்ள பங்குதாரர்களால் விற்பனைக்கு அளிக்கப்படவுள்ள பங்குகளையும் சேர்த்து மொத்தம் ரூபாய், 130 கோடி மதிப்பு கொண்டதாகும்
  • வெளியிடப்படவுள்ள பங்குகள் மொத்தம் 3,767,254 ஒப்புப்பங்குகளாக, ஒவ்வொன்றின் முகமதிப்பும் ரூபாய் 5 ஆக இருக்கும்.(“சாதாரணப் பங்குகள்”)
  • குறைந்த பட்ச கேட்புத் தொகுப்பு 15 ஒப்புப் பங்குகளாகவும் மற்றும் அதற்கு மேல் 15 ஒப்புப் பங்குகளின் கூட்டுத்தொகையாகவும் இருக்கும்
  • அடிநிலை விலை முகப்பு விலையின் 196.60 மடங்காகவும் அதன் (கேப் ப்ரைஸ்) வரையறுக்கப்பட்ட விலையானது முகமதிப்பின் 197 மடங்காகவும் இருக்கும்
  • கேட்பு/ வெளியீட்டுத் தேதி – செப்டம்பர் 11, 2017 மற்றும் கேட்பு/ வெளியீடு முடிவு தேதி – செப்டம்ப்ர் 13, 2017

சென்னை, செப்டம்பர் 6, 2017 : இந்தியாவில் இணையதளத்துக்கு வருகை தரும் தனிப்பட்ட வருகையாளர்களின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் கணினி வழியாக மண இணப்பாளர் சேவையை அளிக்கும் முன்னணி நிறுவனமான மேட்ரிமோனி.காம் லிமிடட் தனது முதல்கட்ட பொதுப்பங்கு (பொதுப்பங்கு-ஐபிஓ அல்லது அளிப்பு) விற்பனையை நிறுவனத்தின் ஒவ்வொரு சரிஒப்புப் பங்கின் மதிப்பை ரூபாய் 5 ஆகக்கொண்டு ரூபாய் 983–ரூபாய் 985 வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் செப்டம்பர் 11, 2017 அன்று தொடங்கி செப்டம்பர் 13, 2017 வரை வெளியிட அட்டவணைப்படுத்தியிருக்கிறது. தகுதி வாய்ந்த முதலீட்டாளரின் முதல் கேட்பு/ அளிப்பு காலம் செப்டம்பர் 08, 2017 ஆக வெளியீட்டுத் தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இருக்கும்.
இந்த முதல் கட்ட (முதல் கட்ட வெளியீடு- ப்ஃரஷ் இஷ்யூ) 130 கோடி ரூபாய் என்ற அளவிலும் மற்றும் வெளியிடப்படும் பொதுப்பங்குகள் 3,767,254 வரையிலான எண்ணிக்கையிலும் இருக்கும். இத்துடன் இணைந்ததாக விற்பனைக்காக பெஸ்ஸிமெர் இந்தியா கேப்பிட்டல் ஹோல்டிங்க்ஸ் II லிட் அளிக்கவிருக்கும் 1,461,006 வரையிலான பொதுப்பங்குகளும், மே பீஃல்ட் XII மொரீஷியஸ் அக்ரிகேட்டிங் விற்பனைக்காக அளிக்கவிருக்கும் 155,760 பொதுப்பங்குகளும், சிஎம்டிபி II அளிக்கவிருக்கும் 1,683,207 பொதுப்பங்குகளும், முருகவேல் ஜானகிராமன் (எங்களது பங்கு விற்பனை உயர்வு ஆதரவளிப்போர்) அளிக்கவிருக்கும் 384,447 பொதுப்பங்குகளும், இந்திராணி ஜானகிராமன் (ஆதரவளிப்போர் குழுமத்தின் உறுப்பினர்) (கூட்டாக “விற்பனை பங்குதாரர்கள்) (கூட்டாக” விற்பனைக்காக அளிக்கப்படுவது”) அளிக்கவிருக்கும் 82,834 ஆகியவைகளும் இருக்கும். இந்த வெளியீடு தகுதிவாய்ந்த பணியாளர்களுக்காக ரூபாய் 50 இலட்சம் வரை ஒதுக்கப்பட்ட தொகையையும் உள்ளடக்கியது இதன் பின்னார் (“பணியாளர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை”) என்று குறிப்பிடப்படும்
இந்த வெளியீடு ஈட்டுப் பத்திர ஒப்பந்த (கட்டுப்பாட்டு) விதிகளின் மாற்றியமைக்கப்பட்ட (“எஸ்சிஆர்ஆர்”)விதி எண் 19(2)(b) (ii) 1957 க்கு இணங்க வெளியிடப்படுகிறது. பொதுப்பங்குகள் மதிப்பை வரையறுக்க (புக் பில்டிங் ப்ராஸஸ்) செக்யூரிடீஸ் அண்டு எக்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா ரெகுலேஷன்ஸ் 2009 ஆல் (இஷ்யூ ஆஃப் கேப்பிடல் மற்றும் டிஸ்க்ளோஷர்க்கான தேவைகள்) விதிக்கப்பட்டு திருத்தப்பட்ட (தி “செபி ரெகுலேஷன்ஸ்”) கட்டுப்பாடு 26(2) க்கு இணங்க இது வெளியிடப்படுகிறது. இதில் குறிப்பிட்டபடி குறைந்த பட்சமாக 75% நிகர பங்குகள் விகிதாச்சார அளவுகளின்படி தகுதியுள்ள நிறுவனம் சார்ந்து வாங்குபவர்களுக்கு (க்யூஐபிக்கள்) ஒதுக்கீடு செய்யப்படும் என்ற போதிலும் எங்களது நிறுவனமும் விற்பனை செய்யும் பங்குதாரர்களும் பங்கு வெளியீட்டுக்கு முன்னரான நடவடிக்கை மேற்கொள்ளும் நிறுவனத்திடம் (பிஆர்எல்எம்). கலந்தாலோசித்து க்யூஐபியின் 60% பங்குகள் வரை முதலில் வரும் முதலீட்டாருக்கு முதல் முதலீட்டாளர் ஒதுக்கீட்டு விலையின் அடிப்படையில் வழங்கப்படலாம். உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து ஏற்கத்தக்க முறையில் வரும் கேட்புகளுக்கு, அதிலிருந்து குறைந்த பட்சமாக மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டு பரஸ்பர நிதிக்காக அதே முதல் முதலீட்டாளர் ஒதுக்கீட்டு விலைக்கு அல்லது அதற்கு அதிகமான விலையில் ஒதுக்கப்படும், வெளியீட்டு வழங்கல் எண்ணிக்கைக்கு குறைவாக கேட்பு இருந்தால் அல்லது முதல் முதலீட்டாளர்களுக்கான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படாது இருந்தால் மிகுதியிருக்கும் பொதுப்பங்குகள் நிகர க்யூஐபி பங்குகளுடன் சேர்க்கப்படும் (பின்வருபவற்றில் வரையறுக்கப்பட்டபடிக்கு). க்யூஐபிக்கு விகிதாச்சார முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிகர பங்குகளில் 5% பங்குகள் (முதல் முதலீட்டார் பங்குகள் தவிர்த்த மற்றவை) பரஸ்பர நிதிக்காக மட்டுமே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.
மிகுதியுள்ள நிகர க்யூஐபி பங்குகள், க்யூஐபிக்கு, (முதல் முதலீட்டார் பங்குகள் தவிர்த்த மற்றவை) பரஸ்பர நிதி உட்பட அவர்களிடமிருந்து ஏற்கத்தக்க கேட்புக்கள் வரும் பட்சத்தில் ஒதுக்கீட் செய்யப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு அதிகமான விலையில் வழங்கப்படும். இருப்பினும் பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற மொத்த கேட்பு நிகர க்யூஐபி ஒதுக்கீட்டில் 5% க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், பரஸ்பர நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்குகளில் எஞ்சியிருக்கும் பொதுப்பங்குகள் கையிருப்பிலுள்ள நிகர க்யூஐபி பங்குகளுடன் க்யூஐபியின் விகிதாச்சார ஒதுக்கீட்டுக்காக சேர்க்கப்பட்டுவிடும். நிகர பங்கு வெளியீட்டில் குறைந்த பட்சமாக 75% க்யூஐபிக்காக ஒதுக்கீடு செய்யப்படாத நிலை இருந்தால் அனைத்து விண்ணப்ப நிதியும் உடனடியாக திரும்ப வழங்கப்படும்.
மேலும் வெளீயீட்டு விலை அல்லது அதற்கு அதிகமான விலையின் அடிப்படையில் ஏற்கத்தக்க முறையான கேட்புக்கள் எழும் பட்சத்தில் மொத்த நிகர பங்கு வெளியீட்டில் நிறுவனம் சாராத கேட்புகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் 15% க்கும் அதிகமாகவோ, அல்லது சில்லரையாக தனிப்பட்ட கேட்புகளுக்கு 10% க்கும் அதிகமாகவோ செபி விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்படாது, அதுவும் பொதுப்பங்குகளின் இருப்பைப் பொருத்து ஒவ்வொரு தனிப்பட்ட சில்லரை கேட்பாளர்களுக்கு குறைந்த பட்ச கேட்பு அளவீட்டுக்குக் குறையாத அளவில் வழங்கப்படும் மற்றும் கையிருப்பில் ஏதும் பொதுப்பங்குகள் இருக்குமானால் அனைத்து தனிப்பட்ட சில்லரை கேட்பாளர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.
முதல் முதலீட்டாளர்கள் தவிர்த்த சாத்தியக்கூறுள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் ஆதரவு பெற்ற ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி நடைமுறைகள் .(ஏஎஸ்பிஏ) மூலமாக விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள். அதில் அவர்களது வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கையில் அவர்களின் கேட்புத் தொகைக்கு உரிய தொகை அதற்காகவென்று சுய அத்தாட்சி பெற்ற வங்கி ஆட்சிக்குழுவால் (Self Certified Syndicate Banks (“SCSBs”) தனியாக அடையாளப்படுத்தப்பட்டு விடும். மேலும் அதிக தகவல்களுக்கு பார்க்க “ வெளியீட்டு நடைமுறைகள்” பக்கம் 407
இந்த முதல் கட்ட வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த விற்பனை வருவாய் பின்வருபவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டும் (i) விளம்பரம் மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகள் (ii) அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்காக சென்னையில் இடம் வாங்குவதற்காக (iii) நாங்கள் பயன்படுத்திய மிகைப்பற்றுக் கடனை அடைப்பதற்காக மற்றும் (iv) நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்காக
இந்த வெளியீட்டுக்கான பங்கு வெளியீட்டுக்கு முன்னரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களாக (“பிஆர்எல்எம்ஸ்”) ஆக்ஸிஸ் கேப்பிட்டல் லிமிடட் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிடீஸ லிமிடெட் ஆகியவை இயங்கும். இந்த வெளியீட்டுக்கு பதிவாளராக கார்வி கம்ப்யூட்டர்ஷேர் பிரைவேட் லிமிடட் இருக்கும்.
மேட்ரிமோனி.காம் இன் பொதுப்பங்குகள் பிஎஸ்இ லிமிடட் மற்றும் இந்திய தேசீயப் பங்குச் சந்தை லிமிடட் ஆகியவற்றில் பட்டியலிடப்பட முன்மொழியப்பட இருக்கிறது.
மேட்ரிமோனியல்.காம் பற்றி
மேட்ரிமோனியல்.காம்மின் தற்போதைய வணிக நடவடிக்கைகள் மண இணைப்புச் சேவைகள் மற்றும் திருமண நிறைவேற்று சேவைகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனை என்ற இரு பிரிவுகளைக் கொண்டது.. 2017 நிதியாண்டில் ஜூன் 30, 2017 இன் காலாண்டு முடிவில் கம்பெனி பெற்ற மொத்த வருமானமும் மண இணைப்புச் சேவைகள் மற்றும் திருமண நிறைவேற்று சேவைகள் மூலமாகப் பெறப்பட்டவை, மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனை சேவைமூலம் எந்த வருமானமும் ஈட்டப்படவில்லை.
காம்ஸ்கோர் அறிக்கையின் படி மேட்ரிமோனியல்.காம் இந்தியாவில் இணையதளத்துக்கு ஜூன் 2017 இல் வருகை தந்த தனிப்பட்ட வருகையாளர்களின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில்(மேட்ரிமோனி.காம் தரவுகள் மேட்ரிமோனியின் கீழுள்ள அனைத்து தளங்களிலிருந்தும் பெறப்பட்ட அனைத்துத் தரவுகளும் உள்ளடக்கியது அல்ல) இந்தியாவில் இணைய தளத்தின் மூலம் மண இணைப்புச் சேவைகள் மற்றும் திருமண நிறைவேற்று சேவைகள் ஆகியவற்றை மேற்கொண்டுவரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். அவர்களின் இணைய தளம், கைப்பேசி இணைப்புத் தளங்கள், கைப்பேசி செயலிகள் மூலமும் இந்தியாவெங்கும் அமையப்பெற்ற செயல்பாட்டு அலுவலக கட்டமைப்பின் துணையோடும் இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மண இணைப்புச் சேவையை அளித்து வருகிறார்கள்.
தி ப்ராண்ட் ட்ரஸ்ட் ரிப்போர்ட் இந்தியா ஆய்வு 2014 (16 நகரங்களிலிலிருந்து 20000 முத்திரை நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்பெற்ற ஆய்வு அறிக்கையில்) அறிக்கையில் இந்தியாவில் இணைய தள மண இணைப்புச் சேவையில் நன்கு நிலைபெற்ற முன்னணி நிறுவனமாக இந்த மேட்ரிமோனியல்.காம் என்ற முத்திரைச் சேவை நிறுவனத்தையும் அவர்களின் மற்ற மண இணைப்புச் சேவை நிறுவனங்களான கம்யூனிட்டி மேட்ரிமோனி.காம் மற்றும் இலைட் மேட்ரிமோனி.காம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளது.

READ MORE:

Matrimony.com Limited’s Initial Public Offer opens on September 11, 2017

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *