100 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட சர்வதேச அளவுக்கு செல்லும்  வாவ் லட்டூஸ்

100 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட சர்வதேச அளவுக்கு செல்லும்  வாவ் லட்டூஸ்

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், தனது செயல்பாடுகளை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்கிறது.
அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
50 சதவீதத்துக்கு மேற்பட்ட வருவாயை ஏற்றுமதி மூலம் திரட்டவுள்ளது.

சென்னை, 16 மே 2018: வாவ் லட்டூஸ்—சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், லட்டுகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இப்போது தனது செயல்பாடுகளை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாவ் லட்டூஸ் நிறுவனமானது புதிதாக முதலீடுகளைச் செய்வதன் மூலமாக, அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என்ற இலக்கினைக் கொண்டிருக்கிறது. அவற்றில், ஏற்றுமதிகள் மூலமாக மட்டுமே 50 சதவீதம் வருவாய் ஈட்ட குறிக்கோள் வைத்துள்ளது. இந்தியாவில் இப்போதுள்ள வளர்ச்சியை முடுக்கி விடவும், சர்வதேச அளவில் மேம்பாடு அடையவும் மூலதன நிதி முதலீடுகளை வாவ் லட்டூஸ் நிறுவனம் எதிர்நோக்கியிருக்கிறது.
வாவ் லட்டூஸ் நிறுவனம் லட்டுகள் தயாரிக்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் முழுமையான மாறுபட்ட அனுபவத்தை வாடிக்கையாளர் பெற்றிடுவதை உயர்ந்த நோக்கமாகக் கொண்டும், அதன் வழியாக இந்தியாவின் புகழ்பெற்ற பண்டத்தை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்லும் பணியிலும் வாவ் லட்டூஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இப்போது மூன்று உற்பத்தி ஆலைகளை வாவ் லட்டூஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. கூடுதல் முதலீடுகள் மூலமாக மேலும் ஐந்து உற்பத்தி ஆலைகளை மும்பை, தில்லி, கோல்கத்தா, ஐதராபாத் போன்ற மிகப்பெரிய நகரங்கள் மற்றும் முதல்தர நகரங்களில் தொடங்கவுள்ளோம். 2 ஆயிரம் எண்ணிக்கையிலான சில்லறை விற்பனைக் கடைகளின் மூலமாக, சிறப்பு வாய்ந்த தனித்துவம் நிறைந்த லட்டுகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதுகுறித்து, வாவ்-லட்டூஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முரளி சேரட் கூறியதாவது:-
எங்களது தயாரிப்புகளுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நல்ல சாதகமான வரவேற்பு கிடைத்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்டுவை மூல ஆதரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு வகை பண்டங்களை உருவாக்கிடும் எங்களது பணிகளுக்கு மேலும் நல்ல வரவேற்பு கிடைத்திடும் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம் என்றார்.
இணைய வழி வர்த்தகம் மூலமாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு ஒற்றை இலக்கம் கொண்ட லட்டு பெட்டியைக் கூட விநியோகம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பமும், மேலாண்மை நிபுணத்துவமும் பயன்படுத்தப்படுகிறது. இது, ஐஐடி-ஐஐஎம் நிறுவனங்களில் படித்த மூன்று பொறியாளர்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் அடுத்தடுத்து வாடிக்கையாளர்கள் லட்டுகளை வாங்குவதன் காரணமாக, ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் வருவாய் அளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் வாவ்-லட்டூஸ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமானது உற்பத்திக்கான உதிரி பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:-
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் லட்டுகள் அடங்கிய ஒரு பாக்ஸை 24 முதல் 48 மணி நேரத்துக்குள் பெற்றிடலாம். இந்த லட்டுகளை உங்கள் வீட்டில் அப்படியே வைத்திடலாம். நல்ல சுவையான, இனிப்புச் சுவை கொண்ட லட்டுகளை எப்போதும் எந்த நேரத்திலும் சுவைத்திடலாம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொபைல் அல்லது இதர பணம் செலுத்தும் வசதியைக் கொண்டு வாவ்-லட்டுகளை பெற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்ப வசதிகளை பின்-டெக் நிறுவனம் செய்து தருகிறது என்றார்.
வாவ் லட்டுஸ்களை நீங்கள் பரிசுப் பொருள்களாக நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உங்கள் விருப்பமானவர்களுக்கும் அளித்திடலாம். ஒவ்வொன்றும் சர்வதேச தரத்திலான பாக்கிங் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்தியர்கள் அல்லாத இதர நாட்டினர் அமேசான் மூலமாக 36 சதவீதத்துக்கும் அதிகமான ஆர்டர்களை பதிவு செய்கின்றனர்.

ALSO READ:

WOW Laddus enter’s Global market

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *