தமிழகத்தில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு!

தகவல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால், தமிழகத்தில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு!

சென்னை, 16 மே 2018, திரு. ரத்தன் டாட்டா (Ratan Tata), கலாரி கேப்பிடல் (Kalaari Capital) மற்றும் ஜி.வி.கே. டேவிக்ஸ் (GVK Davix) முதலீட்டு உதவியுடன், திரு. ரவிக்குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு. ஸ்ரீனி விஸ்வநாத் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட அப்ஸ்டாக்ஸ் (Upstox) ஆன்லைன் புரோக்கிங் நிறுவனத்தின் (முன்பு ஆர்.கே.எஸ்.வி. செக்யூரிட்டீஸ் – formerly RKSV Securities) வர்த்தகம், சென்ற ஆண்டு தமிழகத்தில் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு தமிழகம் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்திலிருந்து, நிறுவனத்துக்கு கிடைத்து வரும் சராசரி ஆர்டர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரண்டு மடங்காகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. ரவிக்குமார் கூறியதாவது, “பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதை ஒவ்வொரு இந்தியரிடமும் கொண்டு சேர்ப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். பங்கு வர்த்தகம் நடைபெறும் இடத்தை விட்டு தமிழகம் போன்ற மாநிலங்கள் வெகுதூரத்தில் இருந்தாலும், எங்கள் அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் எங்களின் தரகு வர்த்தகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது.

அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் ஆன்லைன் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் எண் அடிப்படையில் வாடிக்கையாளரை அறியும் நடைமுறை, காகிதம் இல்லாத பரிமாற்றம் ஆகியவை வாடிக்கையாளர்கள் பங்கு வர்த்தகத்தில் எளிதாக ஈடுபட உதவுவதுடன், அவர்களது செலவுகளையும் குறைக்க உதவுகிறது. இதுதவிர, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பிராட்பேண்ட் மற்றும் மொபைல்போன் பயன்பாடு மிகவும் அதிக அளவில் உள்ளது. எனவே டிஜிட்டல் வழி வாயிலாக பங்குச் சந்தையில் அதிகமானோர் பங்கேற்க இயலுகிறது” என்றார்.

அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான திரு. ஸ்ரீனி விஸ்வநாத் கூறுகையில், “நிதிச் சந்தையில் உலகளாவிய அனுபவம், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைக் கொண்டு மூலதன சந்தையில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். அதிவேக இணையம் மற்றும் அதி நவீன ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி, 2ஜி இணைப்பு மற்றும் குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன்களிலும் எளிதில் கையாளக்கூடியதாக அப்ஸ்டாக்ஸ் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தொலைதூரத்தில் உள்ளவர்கள் கூட எந்தவித தாமதமுமின்றி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். பரஸ்பர நிதி திட்டங்கள் மூலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும் இது பொருந்தும்” என்று கூறினார்.

பங்குச் சந்தையில் தனிநபரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தரகு கட்டணம் இல்லாத வர்த்தக முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் அப்ஸ்டாக்ஸ் தான். ஜீரோ (Zero) தரகு கட்டணம் என்பது சிறிய நகரங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.

பழைய தரகு முறையில் பங்குகளை வாங்கி விற்கும் நடைமுறை மிகவும் சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்கக் கூடியதாக இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து விலகி இருந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் மொபைல்போன் மூலமாக பங்குச் சந்தையில் நீண்டகாலம் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ தரகு கட்டண சேவை அறிமுகம் என்பது பெரும்பாலானோரை பங்குச் சந்தையின் பக்கம் அதிக அளவில் கவர்ந்திழுக்க உதவும்.

இதைத் தவிர, இதர சந்தைப் பிரிவுகளில் அன்றன்றைக்கு பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்வோருக்கு முதலீட்டு அளவுக்கான வரையறையின்றி, ஓர் ஆர்டருக்கு தலா ரூ. 20 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி, 25,000-ஆக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 90,000-ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயும் 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 – ரூ. 6,000 கோடியாக மட்டுமே இருந்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல், தற்போது ரூ. 14,000 – ரூ. 18,000 கோடி அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஸ்டார்ட்-அப் (start-up) நிறுவனங்களில் மிகக் குறுகிய காலத்தில் அப்ஸ்டாக்ஸ், மிக உயரிய இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ALSO READ:

Data and mobile revolution with benefits of paperless transactions boost Upstox’s business in Tamil Nadu

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *