காத்திருப்போர் பட்டியல் திரை விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் திரை விமர்சனம்

லேடி டீரிம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல்.
இதில் சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், சித்;ரா லட்சுமணன்,மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், அப்புக்குட்டி, சென்ராயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எம்.சுகுமார், இசை-ஷான் ரோல்டன், பாடல்கள்-யுகபாரதி, அருண்ராஜா காமராஜ்,ஜிகேபி, கலை இயக்குனர்-லால்குடி என்.இளையராஜா, எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, நோபல், சண்டை-எம்.கணேஷ், ஸ்டில்ஸ்-ராஜ், பிஆர்-நிகில்.
ரயில்வே காவல்துறையின் உயர் அதிகாரியான அருள்தாஸ் தினமும் ரயிலில் பயணம் செய்பவர்களை கண்காணித்து தவறு செய்பவர்களை கைது செய்து ரயில்வே கோர்ட்டில் ஆஜர் செய்து அபாரதம் செலுத்திய பிறகு விடுவிப்பது வாடிக்கை.அதே போல் சச்சின் மணி, மனோபாலா, மயில்சாமி, அப்புக்குட்டி. சென்ராயன், அருண்ராஜா மற்றும் பலரை கைது செய்து ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். இதில் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தாலும் சச்;;;;சின் மணி மட்டும் தன் காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார். நேரம் கடந்து கொண்டே போக ரயில் நிலையத்தில் குண்டு வைக்கப் பட்டிருப்பதாக தகவல்வர, கைது செய்தவர்களை மாலை வரை விடுவிக்கக் கூடாது என்று ரயில்வே போலீசுக்கு உத்தரவு வருகிறது. இதனால் பதட்டமடையும்; சச்சினை தப்பித்து போவதற்கு உதவ அங்கிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.இவர்களுடைய திட்டம் வெற்றி பெற்றதா? சச்சின் நண்பர்கள் உதவியுடன் தப்பித்தாரா? காதலி நந்திதாவின் திருமணத்தை தடுத்தாரா? அதன் பின் நண்பர்களையும் தப்பிக்க வைத்தாரா? என்பதே ஒரு நாள் நடக்கும் கதைக்களம்.
சச்சின் மணி சத்யாவாக புதுமுகமாக அறிமுகமானாலும் தன் யதார்த்தமான நடிப்பால் காதல், பாடல் காட்சிகள் மட்டுமில்லாமல் படம் முழுவதும் முத்திரை பதித்திருக்கிறார்.
நந்திதா ஸ்வேதா காதலி மேகலவாக அழகு பதுமையாக எப்போழுதும் போல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.
அருள்தாஸ் காவல்துறை அதிகாரி வில்லியம்ஸாக முக்கியமான கதாபாத்திரத்தில் மிடுக்கான மிரட்டலான அதட்டலுடன் வலம் வந்து உள்ளுக்குள் மதிக்காத தன்னை பழி வாங்கும் போக்குடன் மக்களை பயமுறுத்தும் நினைப்புடன் அலட்டலுடன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நந்திதாவின் தந்தையாக சித்ரா லட்சுமணன் நகைச்சுவைக்காக மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், அப்புக்குட்டி சென்ராயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பலர் இருந்தும் சிரிப்புக்கு உத்திரவாதமில்லை ஆனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு ரயில்வே ஸ்டேஷன், பாண்டிச்சேரி, பாடல் காட்சிகள் என்று காட்சிகளுக்கேற்ப ரசிக்கும்படி தந்து அழகு சேர்க்கிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமான இருந்தாலும் மனதில் நிற்கவில்லை.
கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்-பாலையா டி.ராஜசேகர். படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் புதுமையான சம்பவங்கள் வித்தியாசமாக காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைத்தாலும் ஹீரோவின் காதல் கதை என்ட்ரி ஆகும் போது இருக்கும் விறுவிறுப்பு போகப் போக சுவாரஸ்யத்தை இழந்தாலும் இறுதிக் காட்சியில் லாஜிக்கை மறக்கச் செய்யும் அளவிற்கு திருப்திகரமாக இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர்.
காத்திருப்போர் பட்டியல் வித்தியாசமான முயற்சிக்கும், சிந்தனைக்கும் மினிமம் உத்திரவாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *