மின் கட்டணம் செலுத்த புதிய செயலி  ‘பாரத் பில்பே’ அறிமுகம்

மின் கட்டணம் செலுத்த புதிய செயலி  ‘பாரத் பில்பே’ அறிமுகம்

சென்னை, ‘நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்த முடியும். இது அவர்களது நேரத்தையும், கட்டணம் செலுத்த மேற்கொள்ளும் போக்குவரத்துக்கான செலவையும் மிச்சப்படுத்த உதவும்’ என்றார்.

ALSO READ:

Bharat BillPay empowers over 2.79 Cr consumers of TamilNadu for easy bill payment

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *