பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு  வழங்கும் விழா

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு  வழங்கும் விழா, திருவள்ளூர் மாவட்டம்

பிரதான் மந்திரியின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு  வழங்கும் திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமத்தைச் சேர்ந்த வறுமை  கோட்டுக்கீழ் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு பாரத் பெட்ரோலியத்தின் தலைவரும் நிர்வாகஇயக்குனருமான ராஜ்குமார் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்கினார்.

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உஜ்வாலா யோஜ்னா திட்டம்தொடங்கப்பட்டது. இதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள  குடும்பங்களுக்கு எரிவாயு நிறுவங்கள் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் உஜ்வாலா தினமான ஏப்ரல் 20 ம் தேதி நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்குஇலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமத்தில் உள்ள பலராம் நாயுடு பள்ளியில் மத்திய அரசின்  இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரத் பெட்ரோலியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜ்குமார் கலந்து கொண்டார். வறுமை கோட்டுக்கு  கீழ் உள்ளசுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்புகளை பாரத்  பெட்ரோலியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜ்குமார்வழங்கினார். இந்த  நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:

Pradhan Manti Ujjwala Yojana (PMUY) connections in SIRUNIUM village, Tiruvallur District

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *